Daily Puja: வீட்டில் பூஜை எப்படி செய்ய வேண்டும்? - வாங்க தெரிஞ்சுக்கலாம்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Daily Puja: வீட்டில் பூஜை எப்படி செய்ய வேண்டும்? - வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

Daily Puja: வீட்டில் பூஜை எப்படி செய்ய வேண்டும்? - வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

Karthikeyan S HT Tamil
Sep 17, 2023 04:02 PM IST

நாம் தினமும் வணங்கும் கடவுளுக்கு உண்மையில் பூஜை எப்படி செய்ய வேண்டும்? அதன் முறைகள் என்ன என்பதைப் பற்றி இங்கு காண்போம்.

விநாயகர், லட்சுமி
விநாயகர், லட்சுமி

இறைவனுக்கு பூஜை செய்யும் பொருட்களில் முக்கியமான ஒன்று பூக்கள். செயற்கை பூக்கள், பிளாஸ்டிக் பூக்கள் போன்றவை பூஜைக்கு பயன்படுத்த வேண்டாம். இயற்கையான நறுமணம் கமழும் பூக்களை கொண்டு பூஜை செய்யுங்கள். விளக்கை ஏற்றி இந்த விளக்கை போல தெய்வத்தின் அருள் எங்களுடைய வாழ்க்கையில் உள்ள இருமையை அகற்றி ஒளிரட்டும் என்று நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

குல தெய்வத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்து வழிபடுவது நல்ல பலன்களை தரும். ஒரு நாளைக்கு மூன்று முறை பூஜை செய்ய முடியாவிட்டாலும், காலை ஒரு நேரமாவது சந்தனம், பூக்கள் போன்றவற்றை வைத்து பூஜை செய்யுங்கள். பூஜை செய்யும் போது வெறும் கற்சிலை அல்லது படங்களை வணங்குகிறோம் என்று நினைக்கக் கூடாது. சக்தி வாய்ந்த தெய்வம் நம் முன் இருக்கிறார் என்ற பாவனையோடு பூஜை செய்ய வேண்டும்.

நல்ல வாசனை உள்ள ஊதுபத்தி, சாம்பிராணியை பூஜைக்கு பயன்படுத்தவும். பூஜை செய்யும் பொழுது ஊதுவத்தியாக இருந்தாலும் சரி, சாம்பிராணியாக இருந்தாலும் சரி அதை வலதுபுறமாக சுற்றிதான் பூஜை செய்ய வேண்டும். ஊதுபத்தியை சுவாமியின் முன்பு மூன்று முறை சுற்றி காட்டி வையுங்கள். நைவேத்யம் என்பது நாம் சமைத்து தான் வைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. உதாரணமாக உலர் திராட்சை, கற்கண்டு, சர்க்கரை, பழ வகைகள் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினசரி இறைவனுக்கு படைத்து பூஜை செய்யலாம். நைவேத்யம் செய்த பிறகு மீதமுள்ள உணவை கலந்து எல்லாருக்கும் கொடுங்கள். இதை சாப்பிடுபவர் எல்லாரும் பலனடைவர்.

பூஜையின் இறுதி கட்டத்தில்தான் கற்பூர ஆராதனை காட்டவேண்டும். அப்போது உங்களுக்கு தெரிந்த ஸ்லோகங்களை இறைவனுக்காக சமர்ப்பிக்கலாம். பொதுவாக பூஜையை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இருப்பினும் குடும்பத்தில் உள்ள மூத்த ஆண் பூஜை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் ஆண் இல்லை என்றால் மூத்த பெண் பூஜை செய்யலாம். பூஜை செய்யும் போது உங்கள் தெய்வீக உணர்வு அதிகரித்து ஒருமுகப்படுத்தப்படுகிறது. எதிர்மறை விளைவுகள் விரட்டப்படுகின்றன. எனவே வீட்டில் சரியான முறையில் பூஜை செய்து தெய்வீக ஆசியை பெறுவோம்..!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner