Maragatha Lingam: மரக லிங்கத்தின் சிறப்புகள் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Maragatha Lingam: மரக லிங்கத்தின் சிறப்புகள் தெரியுமா?

Maragatha Lingam: மரக லிங்கத்தின் சிறப்புகள் தெரியுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 12, 2022 02:58 PM IST

மரக லிங்கம் இருக்கும் சிறப்பான ஏழு கோயில்கள் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

மரக லிங்கம்
மரக லிங்கம்

மரகத லிங்கத்தை வழிபட்டு வர ஆரோக்கியம், கல்வி, பெரிய பதவி, அரசருக்கு அடுத்த பதிவியை தரக்கூடிய யோகத்தை பெறலாம். அதோடு நம்முடைய தொழில் வியாபாரம் விருத்தியடையவும்ம் உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த உயரத்தை அடையலாம்.

அத்துடன் நம்முடைய சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெறலாம். மேலும் இந்த மரகத லிங்கத்தை இந்திரன் வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகத லிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது நம்பிக்கை. மரகதலிங்கம் என்பது மரகதம் என்னும் கனிமத்தால் செய்யப்பட்ட சிவலிங்கமாகும்.

இந்த சிவலிங்கம் மரணத்தின் தன்மையால் பச்சை நிறமுடையதாக இருக்கிறது. இந்த மரகதலிங்கத்தினை தமிழகத்தில் உள்ள எண்ணற்ற சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகிறார்கள் என்பதும், இந்த மரகத லிங்கத்தினை தமிழகத்தில் உள்ள எண்ணற்ற சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்து வழிபடும் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்மூர்த்திகளில் ஒருவராக சிவபெருமானுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல சிவாலயங்கள் உள்ளன. பழமை வாய்ந்த ஒவ்வொரு சிவன் கோயிலும் ஒவ்வொரு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. விலை உயர்ந்த ரத்தினங்களில் மரகதமும் ஒன்று. அப்படிப்பட்ட மரகத கல்லினால் செய்யப்பட்ட சிவலிங்கம் உள்ள சில கோயில்கள் உள்ளன. ஏழு மரகதலிங்கம் அமைந்துள்ள திருக்கோயில்கள் பற்றி பார்ப்போம்.

சோழர் சக்கரவர்த்தி முசுகுந்தா கடும் தவம் செய்து ஏழு மரகத சிவலிங்கங்களை தேவர்களின் அரசனான இந்திரனிடமிருந்து பெற்றான். அந்த விலைமதிக்க முடியாத மரகத லிங்கங்களை வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாய்மூர் ஆகிய ஏழு இடங்களில் மக்கள் வழிபாட்டிற்காக சிவாலயங்களில் அமைத்து திருக்கோயில் எழுப்பினார்.

இப்படிப்பட்ட மரகதலிங்க அபிஷேகத்தின் பலன்களை பார்க்கலாம். மரகதலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்து அதை அருந்தினால் மிகச்சிறந்த மருத்துவ சக்தியாக இருக்கும். அதேபோல மரகதலிங்கத்தின் மேல் சாற்றப்படும் சந்தனத்தை பூசி கொள்வதால் நல்ல மருத்துவ பலனைத் தரும் என்றும் கூறப்படுகிறது.

Whats_app_banner