Aarupadaiveedu: அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக சுற்றுலா.. விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு கட்டணம் இல்லாமல், இலவச ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய 6 தலங்களுக்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திட சிரமப்படுவதை கருத்தில் கொண்டு இலவசமாக அழைத்துச் செல்லும் இந்த புதிய முயற்சியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளதாக அத்துறை அமைச்சா் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். எனவே, மூத்த குடிமக்களுக்காகவே இந்த ஆன்மிக சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த 6 திருக்கோயில்களுக்கும் கட்டணம் இல்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பேர் வீதம் ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைக்க உள்ளனர்.
அதன்படி, முதற்கட்ட அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் வருகின்ற 28-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பத்தினை இன்று (டிச.11) முதல் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் (https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/178/document_1.pdf) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவர். 200-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்து செல்ல முன்னுரிமை வழங்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகர் பாபு தெரிவித்துள்ளாா்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்