நாளை வக்ர நிவர்த்தி பெறும் சனி! செம்ம அடி வாங்க போகும் 3 ராசிகள்! சிம்மம், விருச்சிகம், மகரத்திற்கு தலைவலி உறுதி!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  நாளை வக்ர நிவர்த்தி பெறும் சனி! செம்ம அடி வாங்க போகும் 3 ராசிகள்! சிம்மம், விருச்சிகம், மகரத்திற்கு தலைவலி உறுதி!

நாளை வக்ர நிவர்த்தி பெறும் சனி! செம்ம அடி வாங்க போகும் 3 ராசிகள்! சிம்மம், விருச்சிகம், மகரத்திற்கு தலைவலி உறுதி!

Kathiravan V HT Tamil
Nov 14, 2024 01:51 PM IST

கடந்த ஜூன் 29ஆம் தேதி கும்பம் ராசியில் வக்ரம் பெற சனி பகவான் 139 நாட்களுக்கு பிறகு நவம்பர் 15ஆம் தேதியான நாளைய தினம் வக்ர நிர்வர்த்தி பெற உள்ளார். சனி பகவான் வக்ர நிர்வர்த்தி பெறுவது சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை கொண்டு வரும். சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Rashifal Shani Margi
Rashifal Shani Margi

அதே வேளையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி கும்பம் ராசியில் வக்ரம் பெற சனி பகவான் 139 நாட்களுக்கு பிறகு நவம்பர் 15ஆம் தேதியான நாளைய தினம் வக்ர நிர்வர்த்தி பெற உள்ளார். சனி பகவான் வக்ர நிர்வர்த்தி பெறுவது சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை கொண்டு வரும். சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் வக்ர நிர்வர்த்தி அடைவது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும்.  சனி வக்ர நிர்வர்த்தியால் சில ராசிக்காரர்களுக்கு உடல், மனம், பணம் சார்ந்த பிரச்னைகளை உண்டாக்கும். 

சிம்மம்

சனி வக்ர நிர்வர்த்தி அடைவது சிம்மம் ராசிக்காரர்களுக்கு சில சிரமங்களை உண்டாக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பெரும் நிதி இழப்பு ஏற்படலாம். இந்த நேரத்தில், உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வாக்குவாதங்களில் இருந்து விலகி கோபத்தை தவிர்க்கவும். வேலையை மாற்ற நினைப்பவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். தொழிலதிபர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் வக்ர நிவர்த்தி என்பது சில பிரச்னைகளை உண்டாக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் உடன் பிரச்னைகள் வரலாம். புதிய முதலீடுகளை தற்போது செய்ய வேண்டாம். வியாபாரத்தை விரிவு செய்வதை தள்ளிப்போடவும். அதிகப்படியான செலவுகள் மன உளைச்சலை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

மகரம்
சனி பகவான் வக்ர நிவர்த்தி ஆனது மகர ராசிக்காரர்களுக்கு சில பிரச்னைகளை உண்டாக்கும். தொழிலதிபர்களுக்கு சில கடினமான நேரங்கள் உருவாகும். நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் வந்து விலகும். சிறிய விஷயங்கள் பெரிய பிரச்சினைகளாக மாறும் என்பதால் பேச்சில் கவனம் தேவை. 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner