’ரிஷபம் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வரும் சனி! கொட்டும் பணத்தை பிடிக்க ரெடியா?’ சனி பெயர்ச்சி பலன்கள் 2025
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’ரிஷபம் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வரும் சனி! கொட்டும் பணத்தை பிடிக்க ரெடியா?’ சனி பெயர்ச்சி பலன்கள் 2025

’ரிஷபம் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வரும் சனி! கொட்டும் பணத்தை பிடிக்க ரெடியா?’ சனி பெயர்ச்சி பலன்கள் 2025

Kathiravan V HT Tamil
Dec 03, 2024 06:03 PM IST

Sani Peyarchi Palangal 2025: லாப ஸ்தானத்திற்கு வரும் சனி பகவானால் ரிஷபம் ராசிக்கு நற்பலன்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். 11ஆம் இடம் என்பது வெற்றியை தீர்மானிக்கும் ஸ்தானம் ஆகும்.

’ரிஷபம் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வரும் சனி! கொட்டும் பணத்தை பிடிக்க ரெடியா?’ சனி பெயர்ச்சி பலன்கள் 2025
’ரிஷபம் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வரும் சனி! கொட்டும் பணத்தை பிடிக்க ரெடியா?’ சனி பெயர்ச்சி பலன்கள் 2025

லாப ஸ்தானத்தில் சனி 

லாப ஸ்தானத்திற்கு வரும் சனி பகவானால் ரிஷபம் ராசிக்கு நற்பலன்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். 11ஆம் இடம் என்பது வெற்றியை தீர்மானிக்கும் ஸ்தானம் ஆகும். இதுவரை நீங்கள் செய்து வந்த வியாபாரத்திற்கும், மார்ச் மாதத்திற்கு பிறகு செய்ய போகும் வியாபாரத்திற்கும் பெரிய அளவிலான வித்தியாசங்கள் இருக்கும். வழக்கமான வருவாயை விட கூடுதல் வருவாயை ஈட்டுவீர்கள். 

ரிஷபம் ராசிக்கு சனி பகவானே யோகாதிபதி ஆவார். ரிஷபம் ராசிக்கு 9 மற்றும் 10ஆம் இடங்களுக்கு அதிபதியான சனி பகவானால் தொடர்ந்து நற்பலன்கள் கிடைக்கும். பாக்கியாதிபதியான சனி பகவான் மூலம் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் மூலம் நன்மைகளை செய்வார்.  நிதி சார்ந்த விவகாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். கடன்களை அடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வங்கி உள்ளிட்ட நிதி அமைப்புகளிடம் இருந்து கடன்கள் கிடைக்கும். 

முன்னேறும் காலம் இது 

அடுத்த 2 ஆண்டுகளுக்கு வாழ்கையில் முன்னேற அதிக முயற்சிகளை எடுப்பது சாதமான பலன்களை தரும். பணியிடங்களில் இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் தீரும். உயரதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உயர்கல்வி மற்றும் வேலைக்காக வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகள் கைக்கொடுக்கும். கடல்தாண்டி வெற்றிகளை குவிப்பீர்கள். சொந்த தொழில் செய்பவர்கள் வியாபாரம் மற்றும் தொழிலை விரிவு செய்யலாம். புதிய தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். 

லாப ஸ்தானத்தில் உள்ள சனி 3ஆம் பார்வையாக ராசியை பார்ப்பதால் முயற்சிகள் கைக்கொடுக்கும். ரிஷபம் ராசிக்கு 5ஆம் வீட்டில் சனி பார்வை படுவது முன் ஜென்மத்தில் செய்த நல்வினைகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner