Sani Peyarchi 2025: மகரம் ராசிக்கு முடிவுக்கு வரும் ஏழரை சனி! அள்ளி கொடுக்க போகும் சனி பகவான்! பிடிக்க ரெடியா?-sani peyarchi 2025 saturn transit from kumbam rasi to meenam rasi benefits for magaram rasi - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Peyarchi 2025: மகரம் ராசிக்கு முடிவுக்கு வரும் ஏழரை சனி! அள்ளி கொடுக்க போகும் சனி பகவான்! பிடிக்க ரெடியா?

Sani Peyarchi 2025: மகரம் ராசிக்கு முடிவுக்கு வரும் ஏழரை சனி! அள்ளி கொடுக்க போகும் சனி பகவான்! பிடிக்க ரெடியா?

Kathiravan V HT Tamil
Aug 14, 2024 04:31 PM IST

Sani Peyarchi 2025: 29-03-2025 முதல் ஏழரை சனி முழுமையாக விளங்குகின்றது. சனி பகவான் மூன்றாம் இடமான மீனம் ராசியில் அமர்கிறார். இந்த நிலையில் சனி பகவான் அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் தருவார்.

Sani Peyarchi 2025: மகரம் ராசிக்கு முடிவுக்கு வரும் ஏழரை சனி! அள்ளி கொடுக்க போகும் சனி பகவான்! பிடிக்க ரெடியா?
Sani Peyarchi 2025: மகரம் ராசிக்கு முடிவுக்கு வரும் ஏழரை சனி! அள்ளி கொடுக்க போகும் சனி பகவான்! பிடிக்க ரெடியா?

அதிக தாக்கம் ஏற்படுத்தும் சனி பகவான்!

சனி பகவானை பொறுத்தவரை சூரிய குடும்பத்தில் கடைசி கிரகமாக உள்ளார். வாயு கிரகமான சனி பகவான் கர்ம காரகன் ஆவார். தொழில் மற்றும் ஆயுள்காரகன் ஆக உள்ள சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சாரம் செய்யக்கூடியவர் ஆவார். மனித வாழ்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகம் ஆவார்.

சனி பகவான் மூலம் தரும் அழியா சொத்தாக நிலைத்து இருக்கும். பிறப்பு ஜாதகத்தில் சனி பகவான் சுபர் பார்வை, சுபர் சேர்க்கை, சனி பகவானுக்கு இருபுறமும் சுப கிரகம் அல்லது சனி நின்ற ராசியில் அடுத்த ராசியில் சுப கிரகம் இருப்பது வாழ்கையில் நன்மைகளை ஏற்படுத்தி தரும்.

ராஜயோகத்தை தரும் சனி பகவான்! 

இந்த பெயர்ச்சி மூலம் மகரம் ராசிக்கு மூன்றாம் இடமான மீனம் ராசியில் சனி பகவான் அமர உள்ளார். கோச்சாரப்படி சனி பகவானுக்கு 3, 6, 11 ஆகிய இடங்கள் ராஜ யோகத்தை தரக்கூடிய இடங்களாக உள்ளது. 

காலபுருஷனுக்கு 10ஆவது ராசியான மகரம் ராசிக்கு அதிபதியாக சனி பகவான் உள்ளார். உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம் நட்சத்திரத்தில் 4 பாதங்களும், அவிட்டம் நட்சத்திரத்தில் 1, 2 பாதங்களும் இதில் உள்ளது. 

உழைப்பை நம்பும் மகரம் ராசி! 

கடின உழைப்பாளிகள் ஆன மகரம் ராசிக்காரர்கள் நுணுக்கம் ஆன அறிவை பெற்று விளங்குவார்கள், முயற்சியை கைவிடாத இவர்கள் உழைப்பால் முன்னேறுவார்கள். நேர்மையாக இருக்கும் இவர்களுக்கு சனி பகவானின் பக்க பலம் உண்டு. மகரம் ராசிக்காரர்கள் சோம்பலாக இருக்க கூடாது. சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் நிறைய நன்மைகளை அடைய முடியும். 

மகரம் ராசிக்குள் செவ்வாய் உச்சம் பெறுவதால் அடிக்கடி கோபப்படும் குணம் இவர்களுக்கு உண்டு. குரு பகவான் மகரம் ராசியில் நீசம் பெறுவதால் இவர்களுக்கு பணத்தின் அருமை தெரியாது. பணத்தின் அருமை எப்போது தெரிகிறதோ அப்போது முதல் வாழ்கையில் முன்னேற்றம் தொடங்கும் காலமாக இருக்கும். 

சனி பெயர்ச்சியால் உருவாகும் மாற்றங்கள் என்ன?

29-03-2025 முதல் ஏழரை சனி முழுமையாக விளங்குகின்றது. சனி பகவான் மூன்றாம் இடமான மீனம் ராசியில் அமர்கிறார். இந்த நிலையில் சனி பகவான் அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் தருவார். 

2020-2023ஆம் காலகட்டத்தில் பெரிய கஷ்டங்களை மகரம் ராசிக்காரர்கள் அனுபவித்து இருக்க நேரிட்டு இருக்கும். இந்த காலகட்டத்தில் நிறைய அனுபவ பாடங்கள் இவர்களுக்கு கிடைத்து இருக்கும். தன்னையும், தன்னை சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளக்கூடிய காலகட்டமாக இந்த காலம் இருந்து இருக்கும்.  

எல்லா கஷ்டங்களும் தீரும்!

இனி எல்லா கஷ்டங்களும் தீரும் காலமாக சனி பெயர்ச்சிக்கு பிந்தைய காலம் விளங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுவது, வேலையை இழந்தவர்களுக்கு புதிய வேலைகள் கிடைப்பது உள்ள்

3ஆம் இடத்தில் அமரும் சனி பகவான் மூலம் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். தைரியம், வெற்றி, ஆபரணம், முயற்சியை குறிக்கும் இடமாக இவைகள் விளங்குகின்றது. மனதில் தைரியம் பிறக்கும், முயற்சிகள் கைக்கூடும். போட்டித் தேர்வுகள் எழுதக்கூடியவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். 

கமிஷன், ஷேர் மார்க்கெட், தகவல் தொழில்நுட்பம், கனிணி சார்ந்த வேலைகளில் இருப்பவர்களுக்கு பெருத்த நன்மைகள் ஏற்படும். 

இந்த காலகட்டத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிட்டும். வாழ்கையில் எதை நோக்கி செல்கிறீர்களோ அது உங்களுக்கு கிடைக்கும். இந்த நேரத்தில் பிடிவாதம் கொள்ளாமல் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. 

புதிய தொழில்கள் அமையும்!

நீண்ட காலமாக உயர் பதவி கிடைக்காதவர்களுக்கு உயர் பதவிகளில் அமரும் நிலை உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்கையில் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு புதிய தொழில்கள் அமையும். வியாபார துறையில் கொடிக்கட்டி பறக்க முடியும்.  தொழிலை விரிவு செய்யும் காலமாக இது இருக்கும். 

உடல் ரீதியாக  இருந்த பிரச்னைகள் தீரும், தம்பதிகள் இடையே இருந்த பிரச்னைகள் நிவர்த்தி ஆக்யும். கூட்டுத் தொலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மேலதிகாரிகள் உடன் இருந்த மன கசப்புகள் முடிவுக்கு வரும். மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்கையை வாழும் நிலையை சனி பகவான் ஏற்படுத்தி தருவார். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.