Samara Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்க வைக்கும் சாமர யோகம் பற்றி தெரியுமா?-samara yogam discover the power of samara yoga wealth longevity and strength in astrology - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Samara Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்க வைக்கும் சாமர யோகம் பற்றி தெரியுமா?

Samara Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்க வைக்கும் சாமர யோகம் பற்றி தெரியுமா?

Kathiravan V HT Tamil
Sep 23, 2024 03:24 PM IST

Samara Yogam: ஒருவருக்கு தலைமுறைகள் கடந்த செல்வத்தை தந்து விட்டு போகும் யோகமாக சாமர யோகம் விளங்குகின்றது. இந்த யோகம் தரும் செல்வத்தை அனுபவிக்கும் பொருட்டு நீண்ட ஆயுளையும் ஜாதகருக்கு இந்த யோகம் வழங்கும்.

Samara Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்க வைக்கும் சாமர யோகம் பற்றி தெரியுமா?
Samara Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்க வைக்கும் சாமர யோகம் பற்றி தெரியுமா?

நிறை ஆயுளும் நீண்ட செல்வமும்!

ஒருவருக்கு தலைமுறைகள் கடந்த செல்வத்தை தந்து விட்டு போகும் யோகமாக சாமர யோகம் விளங்குகின்றது. இந்த யோகம் தரும் செல்வத்தை அனுபவிக்கும் பொருட்டு நீண்ட ஆயுளையும் ஜாதகருக்கு இந்த யோகம் வழங்கும்.

சாமர யோகத்திற்கான விதிகள் 

இந்த யோகம் ஒருவருக்கு கிடைக்க வேண்டும் எனில் அவர் பகலில் பிறந்து இருக்க வேண்டும் என்பதுதான் முதல் விதியாக உள்ளது.  அதாவது காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணிக்கு உள்ளாக பிறந்து இருக்க வேண்டும். 

அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி பௌர்ணமி வரையில் உள்ள வளர்பிறை காலத்தில் ஜோதிடர் பிறந்து இருக்க வேண்டும் என்பது இரண்டாவது விதி ஆகும். 

மேலும் உங்கள் லக்னாதிபதி உச்சம் பெற்று இருக்க வேண்டும் என்பது இதன் மூன்றாவது விதி. 

உங்கள் லக்னத்திற்கோ அல்லது லக்னாதிபதிக்கோ கேந்திரத்தில் குரு பகவான் அமர்ந்து இருக்க வேண்டும் என்பது நான்காவது விதியாகும். மேலும் குரு பகவான் லக்னத்திற்கோ அல்லது லக்னதிபதிக்கோ இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இந்த விதிகள் பொருந்தும். 

மீன லக்னமும் சாமர யோகமும்

உதாரணமாக மீன லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். இதில் லக்னத்தில் சூரியன், நான்காம் இடம் ஆன  மிதுன ராசி புனர்பூசம் நடத்திரத்தில் சந்திரன் உள்ளார். ஜாதகர் 6 மணி முதல் 7 மணிக்குள் பிறந்து இருப்பார் என்று வைத்துக் கொள்வோம். லக்னாதிபதி ஆன குரு பகவான் வந்து மீனம் ராசியில் உச்சம் பெற்று உள்ளார் எனில் ஜாதகருக்கு சாமர யோகம் ஏற்படும். 

இந்த சாமர யோகம் என்பது நீண்ட ஆயுள், நிலைத்த செல்வம், புகழ், கௌரவம், முன்னேற்றம், ஆளும் அதிகாரம், அதிகாரத்தில் இருப்பவர்களின் தொடர்பு உள்ளிட்டவற்றை தரும். சர லக்னங்களில் இந்த யோகம் அமைந்தால் ஜாதகர் மிகப்பெரிய உச்சத்தை தொடுவார்.

துலாம் லக்னமும் சாமர யோகமும் 

இரண்டாவது உதாரணமாக துலாம் லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். லக்னாதிபதி 6ஆம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்று உள்ளார். 7ஆம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று உள்ளார். 

கடகம் ராசியில் சந்திரன் ஆட்சி பெற்று உள்ளார். லக்னாதிபதியின் கேந்திரம் ஆன 10ஆம் வீட்டில் லக்னத்திற்கு 3ஆம் இடத்தில் குரு ஆட்சி பெற்று உள்ளார். 

இதில் ஜாதகர் பகலில் பிறந்து உள்ளார். கடக ராசி, துலாம் லக்னம், லக்னாதிபதி உச்சம், ராசி அதிபதி ஆட்சி, லாபாதிபதி உச்சம், சூரியனுக்கு திரிகோணத்தில் குரு, லக்னாதிபதிக்கு கேந்திரத்தில் குரு ஆகிய அமைப்புகள் சாமர யோகத்தை உண்டாக்கும்.  இந்த ஜாதகர் பிறக்கும் போதே செல்வந்தராக பிறந்து இருப்பார். இவருக்கு தொடர்ந்து முன்னேற்றம் கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner