Sabarimala Temple: ஐப்பசி மாத சிறப்பு சபரிமலை நடைதிறப்பு!
ஐப்பசி மாத அதனைச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
இந்தியாவில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோயில்களில் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலின் நடையானது மாதாந்திர பூஜைக்காகத் திறந்து மூடப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
என் நிலையில் இக்கோயில் ஐப்பசி மாத பூஜைக்காக வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடைதிறக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து ஐந்து நாட்கள் பூஜை செய்யப்படும். பின்னர் வரும் அக்டோபர் 22ஆம் தேதி அன்று நடை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகரஜோதி வழக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15 ஆம் தேதி அன்று மாலை முதல் கோயில் மீண்டும் திறக்கப்பட உள்ளது. பின்னர் நவம்பர் 16ஆம் தேதியிலிருந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த பூஜைகளில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் சபரிமலையின் அதிகாரப்பூர்வ தேவசம் போர்டு இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.