ரிஷபம் ராசிக்கு 11ஆம் வீட்டு சனியால் பணம் கொட்டுது! பிடிக்க ரெடியா! சனி பெயர்ச்சி பலன்கள்!
முக வசீகரமும், எண்ண ஓட்டமும் நிறைந்த ரிஷபம் ராசிக்காரர்கள் அடுத்து என்ன என்பதை சிந்தித்து செயல்படக் கூடியவர்கள். சனி பெயர்ச்சி மூலம் 10ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 11ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். காலபுருஷனின் 2ஆம் வீடான ரிஷபம் ராசிக்கு அதிபதியாக சுக்கிர பகவான் உள்ளார். கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரங்கள் ரிஷபம் ராசிக்குள் அடக்கம்.
முக வசீகரமும், எண்ண ஓட்டமும் நிறைந்த ரிஷபம் ராசிக்காரர்கள் அடுத்து என்ன என்பதை சிந்தித்து செயல்படக் கூடியவர்கள். சனி பெயர்ச்சி மூலம் 10ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 11ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
பாதிப்புகள் தீரும்
கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணியிடம், தொழில்களில் இருந்த சிக்கல்கள் தீரும். 30 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல திருப்பங்கள் உண்டாகும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். வீடு, மனை, வாகன சேர்க்கை உண்டாகும். காதல் மற்றும் திருமணம் கைக்கூடும். உயர் பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று கூடுவார்கள்.
ஹோட்டல், ரியல் எஸ்டேட், அரசியல், காவல்துறை, மக்கள் சேவை துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பணம் செலவு செய்யும் போது மிக கவனம் தேவை. முதலீடு சார்ந்த விவாகரங்களில் எச்சரிக்கை உடன் செயல்படுவது நல்லது.
உடல் நிலையில் சில பாதிப்புகளை சனி பகவான் கொடுப்பார். உணவு அஜீரணம் சார்ந்த உடல்நல கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம்.
சனி பகவானும் பார்வையும்!
சனி பகவானின் 3ஆம் பார்வை ராசியின் மீது விழுவதால் சோம்பேறித்தனம், எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம்.
ஏழாம் பார்வையாக ஐந்தாம் வீட்டில் விழுவதால் குழந்தைகள் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். சில முயற்சிகளில் தடை, தாமதங்க உண்டாகும்.
10ஆம் பார்வையாக 8ஆம் வீட்டை பார்ப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
வழிபாடுகளும் பரிகாரங்களும்!
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறுவில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனி பகவானை வழிபாடு செய்து, நள தீர்த்தத்தில் குளித்து, நல்லெண்ணை தீபம் ஏற்றினால் நன்மைகள் உண்டாகும். சனி பகவானின் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிக்கும் போது, தான தர்மங்களை செய்யும் போதும் சனி பகவானின் அருளை பெறலாம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.