கண் திருஷ்டியை அழிக்கும் பரிகாரம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கண் திருஷ்டியை அழிக்கும் பரிகாரம்!

கண் திருஷ்டியை அழிக்கும் பரிகாரம்!

Suriyakumar Jayabalan HT Tamil
May 13, 2022 12:19 AM IST

வீட்டிலிருக்கும் சங்கடங்களைத் துடைக்க ஒரு சிறப்பான பரிகாரம் உள்ளது வாருங்கள் பார்க்கலாம்.

<p>கண் திருஷ்டி</p>
<p>கண் திருஷ்டி</p>

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில நேரங்களில் மற்றவர்களின் கண் திருஷ்டியால் தேவையில்லாத பிரச்னைகள் குடும்பத்தில் ஏற்படும். அதனை நிவர்த்தி செய்யப் பல பரிகாரங்கள் உண்டு. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

நாம் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது அடுத்த நொடியே துன்பம் நம்மைத் தேடி வருகிறது. அதற்குக் காரணம் மற்றவர்களின் கண் திருஷ்டி தான். நம் மகிழ்ச்சியைக் கண்டு பொறாமையால் மற்றவர்கள் பார்க்கும் பார்வை நமக்குக் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு ஒரு முக்கியமான பரிகாரம் உள்ளது.

பரிகாரம்

வேப்ப எண்ணெய், மாமர இலை இரண்டையும் ஒரு தட்டின் மீது வைத்துக் கொள்ளவேண்டும். வேப்ப எண்ணெய்யை முழுமையாக மாவிலையின் மீது தடவ வேண்டும். அதனை அதனை ஒரு தட்டில் வைத்து உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் வைத்துவிட வேண்டும்.

முக்கியமாக இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டும், அந்த நாள் முழுவதும் அது வைத்த இடத்திலேயே இருக்க வேண்டும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு அந்த தட்டில் இருக்கும் இலைகளை எடுத்து, நடுவீதி அதாவது வாசலில் வைத்து எரித்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் நம் வீட்டிலிருந்தால் கண் திருஷ்டிகள் அழிந்து போகும்.

தேவையில்லாத பிரச்னைகள் குடும்பத்தில் சண்டைகள், கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு போன்றவை விலகும். மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை இதுபோல் செய்தால் வீட்டிலிருக்கும் சங்கடங்கள் நிவர்த்தியாகும்.

Whats_app_banner