Ravi Yogam: மேஷம் முதல் மீனம் வரை! சூரியன் தரும் சூப்பர் யோகம்! ரவி யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ravi Yogam: மேஷம் முதல் மீனம் வரை! சூரியன் தரும் சூப்பர் யோகம்! ரவி யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

Ravi Yogam: மேஷம் முதல் மீனம் வரை! சூரியன் தரும் சூப்பர் யோகம்! ரவி யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

Kathiravan V HT Tamil
Jul 05, 2024 06:00 AM IST

Ravi Yogam: ஒருவருக்கு ரவி யோகம் உண்டாவதால், ஆரோக்கியமான வாழ்கை, சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம், திடகாத்திரமான உடல் அமைப்பு, பிறரை கவரும் தன்மை, அரசியலில் ஆதயம், அதிகார பதவிகளை பெறுவது, உயர் நிலை அந்தஸ்துகளை வளர வளர அடைவது உள்ளிட்ட நற்பலன்களை ஜாதகரால் பெற முடியும்.

Ravi Yogam: மேஷம் முதல் மீனம் வரை! சூரியன் தரும் சூப்பர் யோகம்! ரவி யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!
Ravi Yogam: மேஷம் முதல் மீனம் வரை! சூரியன் தரும் சூப்பர் யோகம்! ரவி யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

ரவி யோகம் 

உங்கள் ஜாதகத்தில் பத்தாம் இடத்திற்கு சூரியன் இருப்பதன் மூலம் ரவி யோகம் உண்டாகின்றது. சூரியன் உதயத்தில் இருந்துதான், லக்னங்களின் கணக்கு தொடங்கும்.  சூரியன் நின்ற வீட்டில் இருந்து 4 வீடுகள் தள்ளி வரும்போது, சூரியன் நன் பகலுக்கு செல்வார். 

நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்து இருந்தாலும், உங்கள் லக்னத்திற்கு 10 ஆம் இடத்தில் சூரியன் திக்பலம் பெற்று அமைய வேண்டும் என்பது இந்த யோகத்தின் முதல் விதி ஆகும். 

உதாரணமாக ஒருவருக்கு கும்ப லக்னமாக இருந்தால், விருச்சிகம் ராசியில் சூரிய பகவான் இருக்க வேண்டும். மேஷ லக்னமாக இருந்தால் மகரம் ராசியில் சூரியன் இருக்க வேண்டும். 

சூரியன் 10ஆம் இடத்தில் இருக்க, சூரியனுக்கு 6, 11, 3 ஆகிய உபஜெய ஸ்தானங்களில் குரு, செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் இருக்க வேண்டும். என்பது இந்த யோகத்தின் இரண்டாம் விதி ஆகும்.  இந்த ரவி யோகத்தில் புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. 

உதாரணமாக மிதுன லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். இந்த லக்னத்திற்கு 10ஆம் இடமான மீனம் ராசியில் சூரியன் திக் பலம் பெற்று உள்ளார். இங்கிருந்து மூன்றாம் வீடான ரிஷபம், ஆறாம் வீடான சிம்மம், 10ஆம் வீடான தனுசு, 11ஆம் வீடான கும்பத்தில் செவ்வாய், குரு, சனி ஆகிய கிரங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ அமர்ந்து இருந்தால் ரவி யோகம் உண்டாகும். 

ரவி யோகம் தரும் பலன்கள் 

ஒருவருக்கு ரவி யோகம் உண்டாவதால், ஆரோக்கியமான வாழ்கை, சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம், திடகாத்திரமான உடல் அமைப்பு, பிறரை கவரும் தன்மை, அரசியலில் ஆதயம், அதிகார பதவிகளை பெறுவது, உயர் நிலை அந்தஸ்துகளை வளர வளர அடைவது உள்ளிட்ட நற்பலன்களை ஜாதகரால் பெற முடியும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v 

 

Whats_app_banner