ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ராவணன் கோயில்! கூட்டம் கூட்டமாக சென்று கும்பிடும் உத்தர பிரதேச மக்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ராவணன் கோயில்! கூட்டம் கூட்டமாக சென்று கும்பிடும் உத்தர பிரதேச மக்கள்!

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ராவணன் கோயில்! கூட்டம் கூட்டமாக சென்று கும்பிடும் உத்தர பிரதேச மக்கள்!

Kathiravan V HT Tamil
Oct 12, 2024 06:20 AM IST

கான்பூரில் உள்ள சிவாலாவில் ராவணன் கோவில் உள்ளது. ராவணனை வழிபட தசரா தினத்தன்று அதிகாலை முதலே பக்தர்கள் இங்கு வருகின்றனர். இங்கு தசரா நாளில் மட்டும் பூஜை நடக்கும். இந்த ராவணன் கோவிலில், தசரா நாளில் ராவணனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ராவணன் கோயில்! கூட்டம் கூட்டமாக சென்று கும்பிடும் உத்தர பிரதேச மக்கள்!
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ராவணன் கோயில்! கூட்டம் கூட்டமாக சென்று கும்பிடும் உத்தர பிரதேச மக்கள்!

கோயில் மரபுப்படி, காலை எட்டு மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்பட்டு ராவணன் சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் நடைபெறுகின்றது. நாள் முழுவதும் வழிபாடுகள் நடந்து முடிந்த நிலையில் மாலை நேரத்தில் ராவணன் கோயில் கதவுகள் மூடப்படும். ராவணனுக்கு எண்ணெய் மற்றும் மஞ்சள் பூக்களை அர்ப்பணிப்பதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்கி வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும் என்பது நம்பிக்கை. 

விஜயதசமியை முன்னிட்டு இந்த ராவணன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இக்கோயிலைத் தவிர விஜயதசமி நாளில் ராவணனை வழிபடும் இடங்கள் ஏராளம். எந்தெந்த இடங்களில் ராவணன் வழிபடப்படுகிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.

இமாச்சலில் ராவணன் வழிபாடு

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் ராவணன் வழிபாடு உள்ளது. பைஜ்நாத் கங்க்ராவில் ராவணன் தனது கடுமையான தவம் மூலம் சிவபெருமானை மகிழ்வித்ததாக அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள், அன்றில் இருந்து இன்றுவரை அங்குள்ள மக்கள் ராவணனை சிவனின் உயர்ந்த பக்தனாகக் கருதி அவரை வணங்குகிறார்கள்.

ஜோத்பூரில் ராவணன்  வழிபாடு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மவுட்கில், ராவணன் பிராமண சமூகத்தின் வழித்தோன்றலாகக் கருதப்படுகிறார். இதனால், அங்குள்ள மக்கள் ராவணனை தசரா நாள் அன்று எரிப்பதற்கு பதிலாக, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி, அவரை வணங்கி பிண்டம் வழங்கி வருகின்றனர்.

பிஸ்ராக் பகுதியில் ராவண வழிபாடு

உத்தரபிரதேசத்தில் உள்ள பிசார்க் பகுதியிலும் தசரா நாளில் ராவணன் உருவ பொம்மைகள் எரிக்கப்படவில்லை. ஆனால் ராவணன் மற்றும் ராவணனின் தந்தை ரிஷி விஸ்வா ஆகியோர் அங்கு வணங்கப்படுகின்றனர். மேலும் உத்தரபிரதேசத்தின் பிஸ்ராக் என்ற இடத்தில்தான் ராவணன் பிறந்ததார் என்பது அம்மக்களின் நம்பிக்கை ஆக உள்ளது. 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்