Rasipalan : துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை அக்.01 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!-rasipalan libra scorpio sagittarius capricorn aquarius pisces see how your day will be tomorrow october 01 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan : துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை அக்.01 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan : துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை அக்.01 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil
Sep 30, 2024 03:09 PM IST

Rasipalan : வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 1ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan : துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை அக்.01 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan : துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை அக்.01 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

துலாம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கான நாளை (அக்டோபர் 1) ராசிபலன்கள்

துலாம்

துலாம் ராசிக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். முந்தைய வேலைகள் சிறப்பாக முடியும். உங்கள் குடும்பத்துடன் வெளியில் செல்வீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நாளைய நாளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது, நல்ல நேரத்திற்காக பொறுமையாக காத்திருங்கள். 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்கு நாளைய நாள் நன்றாக இருக்கும். நிதி ஆதாயங்களை பெறுவீர்கள். மரியாதைக்குரிய நபர்களை சந்திப்பீர்கள். குடும்பத்துடன் புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு உண்டாகும். மாணவராக இருந்தால் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு உண்டாகும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ஓய்வே இருக்காது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். மேலும், சில முக்கியமான வேலைகள் நிறுத்தப்படலாம் என்பதால் கவனம் தேவை. குடும்பத்தை முழுமையாக கவனித்து கொள்ளுங்கள். சிலர் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகலாம். அறிமுகமில்லாத பெண்களுடன் பழக கூடாது. குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். மொத்தத்தில், மிகவும் கவனமாக வேலை செய்ய வேண்டிய நாள். 

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாள் வெற்றி நிறைந்த நாளாகும். இருப்பினும் அவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களின் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.செலவுகள் அதிகரிப்பதோடு, பண பிரச்னைகளும் ஏற்படலாம். பயனற்ற விஷயங்களில் சிக்கி கொள்ளாதீர்கள். உங்கள் நண்பர்கள் மூலம் பிரச்சனை உண்டாகலாம். மன சமநிலையை இழக்க வேண்டாம். 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். சுப காரியங்களில் பணம் செலவழிக்கலாம். குடும்ப வாழ்கை மகிழ்ச்சியை தரும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். ரியல் எஸ்டேட் வியாபாரம் சிறக்கும். தொழிலில் புதிய நபர்களை சந்திப்பீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் எதையும் பேசும் முன் கவனமாக இருக்கவும், இல்லையெனில் சிக்கலில் மாட்டி கொள்ள நேரிடும்.  வியாபாரத்திற்கு நல்ல நாள் என்றாலும் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்வீர்கள். முதலில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பின்னர் பணம் சம்பாதிப்பது பற்றி சிந்தியுங்கள். ஒரு வேலையை தொடங்கும் போது அதன் பலம், பலவீனத்தை ஆராயாமல் செயல்பட வேண்டாம். சிலர் பழைய நண்பரை சந்திக்கலாம். புதிய வேலையை தொடங்கும் முன் கவனமாக இருங்கள். பிரச்சனைகள் வரலாம்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner