Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.15 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.15 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.15 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil
Nov 14, 2024 03:39 PM IST

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 15ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.15 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.15 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். இந்த நாளில் நண்பர்களை சந்திக்க தயங்க வேண்டாம். நண்பர்கள் உடனான சந்திப்பு உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும். நேரத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்தவும். பணியிடங்களில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் செயலுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள் இது. சிலருக்கு காதல் விஷயங்களில் குடும்பத் தலையீடுகள் வரலாம். உங்கள் முடிவை அனைவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் அல்லது ஆதரிக்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொறுமையாக பேசி கவனம் உடன் செயல்படுங்கள். பணியிடங்களில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கலவையான உணர்வுகளை இந்த நாள் ஏற்படுத்தும். வாழ்கை துணை உடனான உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். தொழிலை விரிவு செய்வது குறித்து சிந்திப்பீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலர் புதிய முதலீடுகளை செய்வீர்கள். ஏற்கெனவே செய்த பழைய முதலீடுகள் லாபத்தை தரும். 

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் இந்த நாளில் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் எண்ணங்களை பிறரிடம் வெளிப்படையாக கூற வேண்டாம். பேச்சில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள். குடும்பத்தில் மக்ழிச்சி நிலவும். வாழ்கை துணை உங்கள் செயலுக்கு ஆதரவாக இருப்பார். புதிய நபர்கள் உடனான சந்திப்பில் கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். 

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாள். உங்கள் தொழிலை வலுப்படுத்தும் சிறிய திட்டங்களில் கவனம் செலுத்துங்கள். எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும் குடும்பத்தினர் உடன் நேரம் செலவிடுங்கள். வாழ்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். இருப்பினும் வாக்குவாதங்களை தவிருங்கள். வீடு, நிலம் வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். 

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு இனிய நாள் இது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தினர் உங்கள் செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணியிடங்களில் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் செயல்களை பலரும் ரசிப்பார்கள். உயரதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner