Guru Vagra Peyarchi 2024: ‘எதிரிகள் விலகி ஓடுவார்கள்!’ துலாம் ராசிக்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்-rasi and guru bhagwan vakram key benefits in life marriage career and education explained - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Vagra Peyarchi 2024: ‘எதிரிகள் விலகி ஓடுவார்கள்!’ துலாம் ராசிக்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்

Guru Vagra Peyarchi 2024: ‘எதிரிகள் விலகி ஓடுவார்கள்!’ துலாம் ராசிக்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்

Kathiravan V HT Tamil
Oct 02, 2024 06:46 PM IST

Guru Vagra Peyarchi 2024: துலாம் ராசி அன்பர்களுக்கு எட்டாம் வீட்டில் குரு பகவான் உள்ளார். 6ஆம் வீட்டுக்கு உடைய குரு பகவான் 8ஆம் வீட்டில் மறைகிறார். இதனால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற நிலை உருவாகும்.

Guru Vagra Peyarchi 2024: ‘எதிரிகள் விலகி ஓடுவார்கள்!’ துலாம் ராசிக்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்
Guru Vagra Peyarchi 2024: ‘எதிரிகள் விலகி ஓடுவார்கள்!’ துலாம் ராசிக்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்

துலாம் ராசியும் குரு பகவானும்!

துலாம் ராசி அன்பர்களுக்கு எட்டாம் வீட்டில் குரு பகவான் உள்ளார். 6ஆம் வீட்டுக்கு உடைய குரு பகவான் 8ஆம் வீட்டில் மறைகிறார். இதனால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற நிலை உருவாகும். கடன், நோய், எதிரி, வம்பு, வழக்குகள் ஆகிய பிரச்னைகள் தீரும். பெரும் கடன் சிக்கல்களில் இருந்தவர்களுக்கு கடன் தீரும்.  தூக்கம் வராத பிரச்னைகள் இருந்தவர்களுக்கு நன்றாக தூக்கம் வரும். மனைவி, பிள்ளைகள் வழியில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் ஒழுக்கம், சுயமரியாதை, கௌரவத்தில் இருந்த பிரச்னைகள் தீரும்.கல்லீரல், பித்தப்பை, மூளை, ஈரல்களில் இருந்த நோய்கள் குணமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வீடு, வண்டி, வாகனம் உள்ளிட்ட சொத்துக்களை சேர்ப்பீர்கள். தடைப்பட்டு இருந்த வருமானம் மீண்டும் வரும்.  

வழிபாடு

குரு பகவான் வழிபாடு வாழ்கையில் மேன்மையை தரும். திருச்செந்தூருக்கு தீர்த்த யாத்திரை செல்லுதல் வெற்றியை ஏற்படுத்தி தரும். ஆலங்குடி, தென்குடி திட்டை, சென்னை திருவள்ளி தாயம், காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள காயரோகணேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் அடுத்த அகரம் கோயில், சிவகங்கை பட்டமங்கலம் வெள்ளியங்கி குருஸ்தலம், சோழவந்தான் குருஸ்தலம், குருவித்துறை போன்ற குரு பகவானின் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்ய சங்கடங்கள் தீர்ந்து நன்மைகள் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner