Purathasi Rasipalan: துலாம் முதல் மீனம் வரை! புரட்டாசியில் பணத்தில் புரளும் ராசிகள்! புரட்டாசி மாதத்திற்கான ராசிபலன்கள்!
Purathasi Rasipalan: செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் வரையிலான புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு மிகுந்த விஷேஷம் தரும் மாதம் ஆகும். நவராத்திரி மற்றும் அமாவாசை வழிபாடு இந்த காலகட்டத்தில் மிகுந்த அனுகூலங்களை தரும் வழிபாடாக உள்ளது.

செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் வரையிலான புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு மிகுந்த விஷேஷம் தரும் மாதம் ஆகும். நவராத்திரி மற்றும் அமாவாசை வழிபாடு இந்த காலகட்டத்தில் மிகுந்த அனுகூலங்களை தரும் வழிபாடாக உள்ளது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
Apr 26, 2025 05:00 AMநேர்மை முக்கியம்.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. இன்று ஏப்.26, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
Apr 25, 2025 09:47 AMபுதாதித்ய யோகம்: வாயை மூடுனா போதும்.. பணம் தானாக கொட்டும் ராசிகள்.. சூரியன் புதன் சேர்க்கை.. உங்கள் ராசி இருக்கா?
Apr 25, 2025 07:00 AMசனி குறி வைத்து பண மழை கொட்டப் போகிறார்.. ஜாலியான ராசிகள்.. கஷ்டங்கள் விலக போகுது!
Apr 25, 2025 05:00 AMபண மழை கொட்டும் யோகம் யாருக்கு.. அதிர்ஷ்டம் கை வருமா.. இன்று ஏப்.25 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 24, 2025 01:46 PMஇந்த 3 ராசிகள் மே மாதத்திலிருந்து கொடிகட்டி பறக்க போறாங்க.. புதன் மேஷத்தில் நுழைகிறார்.. உங்க ராசி என்ன?
துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கு புரட்டாசி மாத ராசிபலன்களை தற்போது பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு பயணங்கள் மூலம் பலன் அடையும் மாதமாக புரட்டாசி மாதம் உள்ளது. உங்களை எதிர்த்த எதிரிகளை வீழ்த்துவீர்கள். சுப விரைய செலவுகள் இருக்கும். கடன் அமைப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் செலவுகளில் கவனம் தேவை. வாழ்கை துணை உடன் உடன் மனமிட்டு பேசுங்கள். துணை உடன் அனுசரித்து செலுங்கள். அலர்ஜி, சுவாசக் கோளாறுகள், ஜாயிண்ட் பெயின், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால் உடல்நலனில் கவனம் தேவை. நரசிம்மர் வழிபாடு நன்மைகளை தரும். மற்றவர்கள் பணத்தை கையாளும் போது கவனம் தேவை. மேலதிகாரிகள் அனுகூலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். ரத்தபந்த உறவுகள், தாய், தந்தை உறவுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் லாபம் மற்றும் அனுகூலம் காணப்படும். அசையும் மற்றும் அசையா பொருள் சேர்க்கை உண்டாகி ஆனந்தம் ஏற்படும். நீண்டநாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியத்தில் இருந்த தடைகள் நிவர்த்தி ஆகும். மேல் அதிகாரிகள் உறுதுணை உண்டு. வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைகள் கிட்டும். பதவி உயர்வு உண்டாகும். தொழிலை விரிவுபடுத்த நல்ல நேரம். பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் கோபதாபம் இல்லாமல் இருப்பது நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் பசு மாடுகளுக்கு கோதுமையை வெல்லம் உடன் கலந்து தருவது மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி தரும். தொழில், உத்தியோகம், படிப்பு சம்பந்தப்பட்ட கவலைகள் தீரும். உத்தியோகமே இல்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். தேவை இல்லாத விஷயங்களுக்கு கோபப்படுவதை தவிர்க்கவும். வாக்கு ஸ்தானத்தில் சனி வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்ப விஷயத்தில் அந்நியர் தலையிடக்கூடாது. பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையிடக்கூடாது. புதிய பொறுப்புகள் மற்றும் பதவிகள் கிடைக்கும். மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும் மிகப்பெரிய அனுகூலத்தையும் மிகப்பெரிய லாபத்தையும் பெற்றுத் தரக்கூடிய அற்புதமான காலகட்டம். நீண்ட நாட்களாக காணப்பட்டிருந்த சிக்கல் படிப்படியாக தீரக்கூடிய அமைப்பு தனுசுக்கு ஏற்படுவது கண்கூடாக பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் புதன்கிழமையில் அன்னதானம், தெய்வ வழிபாடு செய்வது சிறப்புகளை தரும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சிறு தடைகள் காணப்படும். அண்டை அயலார் வீட்டு விஷயத்தில் கோபதாபம் வேண்டாம். புது அறிமுகத்தில் கவனம் தேவை. வயிறு, முதுகு கழிவு, பாதங்கள், முட்டுவலிகளில் கவனம் தேவை. உடற்பயிற்சி செய்யாத மகர ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். ரகசியங்கள் பரம ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
சோம்பல் அதிகமாக இருக்கும். தூக்கமின்மை அதிகமாக ஏற்படும். ராகு பகவானால் தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் உள்ள குறைகள் நிவர்த்தி ஆகும். வெற்றி வாகை சேர்ப்பதற்கு ராகுவுடைய அனுகூலம். மலைக் கோயில்களுக்கோ, குலதெய்வ கோயில்கள் வழிபாடு நன்மைகளை தரும். வண்டி வாகங்களில் மிக கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் புரட்டாசியில் மிக கவனமாக இருக்க வேண்டும். அஷ்டமத்தில் சூரியன் வரக்கூடிய அமைப்பு நரம்பு, தலைவலி, இரத்த நாளங்கள் தொடர்பான பிரச்னைகளில் கவனம் தேவை. கையெழுத்து இடுவதற்கு முன்பாக சட்டத்துக்கு புறம்பானவர்களோட நிழல்கூட அண்டாமல் பாதுகாத்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் கவனமாக இருக்க வேண்டும். ராகு அமைப்பு வாக்கு ஸ்தானத்தில் இருப்பதனால் உணர்ச்சி வசப்படுவது, கூடாநட்பு, புதிய முதலீடுகளில் கவனம் தேவை. கும்ப ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய ஏற்றத்தையும் மிகப்பெரிய நம்பிக்கையும் பெறக்கூடிய அமைப்பு ஏற்படும். கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் குடும்பத்தாருடன் கலந்து ஆலோசிக்காமல் முடிவுகளை எடுக்க வேண்டாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் ஜெயத்தை ஏற்படுத்தி தருவார்கள். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சிக்கல் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். பாரம்பரியமாக இருக்கக்கூடிய சொத்துப் பிரச்சனை பரிபூரணமாக நிவர்த்தி ஏற்படும். பணப்பிரச்சனை நிவர்த்தி ஏற்படும். ஜென்மத்தில் ராகு, ஏழாம் இடத்தில் சூரியனுடன் கேது இருப்பதனால் கோளறு பதிகத்தை தினமும் பாடி வர சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். லாபம், சுப விரையம் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
