Purathasi Rasipalan: மேஷம் முதல் கன்னி வரை! புரட்டாசியில் பணத்தில் புரளும் ராசிகள்! புரட்டாசி மாதத்திற்கான ராசிபலன்கள்!-purathasi rasipalan puratasi month horoscope for mesham rishabam mithunam kadagam simmam kanni rasis - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Purathasi Rasipalan: மேஷம் முதல் கன்னி வரை! புரட்டாசியில் பணத்தில் புரளும் ராசிகள்! புரட்டாசி மாதத்திற்கான ராசிபலன்கள்!

Purathasi Rasipalan: மேஷம் முதல் கன்னி வரை! புரட்டாசியில் பணத்தில் புரளும் ராசிகள்! புரட்டாசி மாதத்திற்கான ராசிபலன்கள்!

Kathiravan V HT Tamil
Sep 21, 2024 05:23 PM IST

Purathasi Rasipalan: செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் வரையிலான புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு மிகுந்த விஷேஷம் தரும் மாதம் ஆகும். நவராத்திரி மற்றும் அமாவாசை வழிபாடு இந்த காலகட்டத்தில் மிகுந்த அனுகூலங்களை தரும் வழிபாடாக உள்ளது.

Purathasi Rasipalan: மேஷம் முதல் கன்னி வரை! புரட்டாசியில் பணத்தில் புரளும் ராசிகள்! புரட்டாசி மாதத்திற்கான ராசிபலன்கள்!
Purathasi Rasipalan: மேஷம் முதல் கன்னி வரை! புரட்டாசியில் பணத்தில் புரளும் ராசிகள்! புரட்டாசி மாதத்திற்கான ராசிபலன்கள்!

மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கு புரட்டாசி மாத ராசிபலன்களை தற்போது பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்கு புரட்டாசி மாதம் ஆனது சத்ரு ஜெயம், பண பாதிப்புகள் நிவர்த்தி, கடன் நிவர்த்தி, நிம்மதி ஏற்படுவது உள்ளிட்ட நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் காணப்பட்ட கஷ்டங்கள் நிவர்த்தி ஆகி மகிழ்ச்சி உண்டாகும். பெரிய மனிதர்கள் தொடர்பும், பயணங்களும் அனுகூலம் தரும். வயறு சார்ந்த விஷயங்களில் கவனம் முக்கியம். வியாயன் கிழமைகளில் தெய்வ வழிபாடு, உணவு தானம் செய்வது நன்மைகளை உண்டாக்கி தரும். புரட்டாசியில் நீங்கள் நினைத்த காரியங்கள் கைக்கூடும். முதலீடுகள் மூலம் நிதி வரவு இர்க்கும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்கள் சிலருக்கு உண்டாகும். பெரியவர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். மனதில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைக்கும் மாதமாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் சனிக்கிழமையில் தெய்வ வழிபாடு செய்து அன்னதானம் கொடுப்பது நன்மைகளை உண்டாகும். 40 வயதை கடந்த ரிஷபம் ராசிக்காரர்கள் இதயத்தை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும். உத்யோகத்தில் உள்ள ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வுகல் கிடைக்கும்.

புதிய முதலீடுகளை தொடங்குவீர்கள், வியாபாரத்தில் விரிவாக்கம் நடைபெறும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் மற்றும் பணியிடத்தில் வளர்ச்சி உண்டாகும். குடும்பத்தில் நிலவிய பிரச்னைகள் தீரும். பிள்ளைகளின் படிப்பு, உத்யோகம், தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளிடம் கோபப்படுவது கூடாது. வியாபாரம் மற்றும் தொழிலில் புதிய யுக்திகளை செயல்படுத்துவீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு தொலை தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வாகனங்களை இயக்குவதில் கவனமாக இருக்க வேண்டும். தாய், தந்தைகயின் உடல்நலனை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். பெற்றோர், பெரியோருடன் மனத்தாங்கல் கூடாது. பழைய கடன்களை திருப்பி செலுத்தும் முயற்சி வெற்றி பெறும். நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்து வந்த ஆரோக்கிய குறைப்பாடுகள் நிவர்த்தி ஆகும். குடும்ப விஷயத்தில் அனுகூலம் காணப்படும். துணை அல்லது துணைவியாருடைய நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றுவீர்கள். படைப்பாளிகள், சினிமா துறை மற்றும் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு லாபம் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் அபிவிருத்தி உண்டாகும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் அற்புதம் ஏற்படும். தொழிலில் இருந்த எதிர்மறை பிரச்னைகள் தீரும். மன அழுத்தங்கள் நீங்கி நம்பிக்கை பிறக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுபகாரிய தடைகள் நிவர்த்தி ஏற்படும். வாழ்கை துணை உடல்நலனில் கவனமாக இருக்கவும். கால், கழிவு பாதையில் உபத்திரங்களில் கவனம் முக்கியம். பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் சிறக்கும். எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக காணப்பட்டிருந்த சிக்கல் படிப்படியாக குறைந்து நிம்மதி உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றிகள் ஏற்படும். புது தொழில் தொடங்கலாம் என்று நினைக்கக்கூடிய கடக ராசிக்காரர்களுக்கு அனுகூலம் உண்டாக்கும். சுபகாரிய தடைகள் நீங்கும். பணவரவு, பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு பெற்றோர், பெரியோர் வழியில் அனுகூலம் உண்டாகும். பெரியோர்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறக்கூடிய காலகட்டம் இது. உங்கள் முயற்சிகளுக்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வண்டி, வாகன மாற்றம், பழைய கடனை செட்டில் செய்வதற்கு உண்டான முயற்சிகள் கைக்கூடும். பேசும் பேச்சில் கவனம் தேவை. காது, மூக்கு, தொண்டை, பற்கள் தொடர்பான பிரச்னைகளில் கவனம் தேவை.

கலை, சினிமா போன்ற படைப்புத்துறையில் உள்ளவர்கள், ஆசிரியர்களுக்கு நன்மைகள் உண்டாகும். சுபகாரிய தடைகள் நிவர்த்தி ஏற்படும். திருமண முயற்சிகள் கைக்கூடும். குலதெய்வ வழிபாடு நன்மைகளை தரும். அஷ்டமத்தில் இருக்கக்கூடிய ராகு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுப்பார்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட உபத்திரம், சளி, காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒத்த தலைவலி போன்ற விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ ஆலோசனைகளை மீறாமல் இருப்பது அவசியம். தாய் மற்றும் தந்தை வழி உறவுகளுடன் வாக்குவாதம் வேண்டாம். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நிவர்த்தி ஆகும். தைரியம், நம்பிக்கை ஏற்படும். குரு பார்வை இருப்பதனால் பணத்தில் இருந்த பாதிப்பு படிப்படியாக குறையும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உத்யோகம் மாற்றத்திற்கு திட்டமிடும் கன்னி ராசிக்காரர்கள் மிக கவனம் உடன் செயல்பட வேண்டும். மேலதிகாரிகள் விஷயத்தில் கோபதாபம் வேண்டாம். பணம் தொடர்பான கணக்கு வழக்குகளில் கவனம் ஆக இருக்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner