Bangaru Adigalar: ‘மகளாக நினைத்து ஊக்கம் அளிப்பார்’ அடிகளார் மறைவுக்கு தமிழிசை வேதனை!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Bangaru Adigalar: ‘மகளாக நினைத்து ஊக்கம் அளிப்பார்’ அடிகளார் மறைவுக்கு தமிழிசை வேதனை!

Bangaru Adigalar: ‘மகளாக நினைத்து ஊக்கம் அளிப்பார்’ அடிகளார் மறைவுக்கு தமிழிசை வேதனை!

Kathiravan V HT Tamil
Oct 19, 2023 07:41 PM IST

“நான் செல்லும் போது அம்மாவை பார்த்துவிட்டுதான் வருவேன். அவரை எப்போது பார்த்தாலும் ஒரு மகளை பார்ப்பதை போல் பார்த்து ஊக்கம் அளிப்பார். இவரது மறைவால் பெண்கள் பரிதவித்து போய்விடுவார்கள்”

பங்காரு அடிகளார் - தமிழிசை சௌந்தராஜன்
பங்காரு அடிகளார் - தமிழிசை சௌந்தராஜன்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக காலமானரர். அவருக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசி உள்ள அவர், நான் மூன்றாவது படிக்கும் மாணவியாக இருந்த காலத்தில் இருந்தே மேல் மருவத்தூர் சக்தி பீடத்தின் மீது ஈடுபாடு உள்ளது. நான் புதுச்சேரி ஆளுநரான பிறகு புதுச்சேரியில் இருந்து எப்போதெல்லாம் சென்னை வருகிறேனோ அப்போதெல்லாம் தவறாமல் அங்கு செல்வேன்.

நான் செல்லும் போது அம்மாவை பார்த்துவிட்டுதான் வருவேன். அவரை எப்போது பார்த்தாலும் ஒரு மகளை பார்ப்பதை போல் பார்த்து ஊக்கம் அளிப்பார். இவரது மறைவால் பெண்கள் பரிதவித்து போய்விடுவார்கள்.

நிர்வாகத்தில் பெண்களை கொண்டு வந்தார். ஆதி பராசக்தி குழுக்களை மாவட்டம் தோறும் அமைத்தார். பூஜை நடத்துவது முதல் கூட்டத்தை கட்டுப்படுத்துவரை அனைத்திலும் பெண்களை நிர்வாக பணிகளில் ஈடுபடுத்தினார். அவரது மறைவு ஆன்மீகத் தலத்திற்கு மிகப்பெரிய இழப்பு.

பெண்கள் பாகுபாடு இன்றி எல்லா நாட்களும் அம்மனை தொட்டு பூஜை செய்யலாம் என்ற வழிபாட்டில் ஒரு வழிகாட்டுதலை தந்தவர்.

 

Whats_app_banner