’வக்ரம் பெற்றார் குரு! வம்புகள் காத்திருக்கிறது! ஜாக்கிரதை!’ மகரம் ராசிக்கான குரு வக்ர பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’வக்ரம் பெற்றார் குரு! வம்புகள் காத்திருக்கிறது! ஜாக்கிரதை!’ மகரம் ராசிக்கான குரு வக்ர பலன்கள்!

’வக்ரம் பெற்றார் குரு! வம்புகள் காத்திருக்கிறது! ஜாக்கிரதை!’ மகரம் ராசிக்கான குரு வக்ர பலன்கள்!

Kathiravan V HT Tamil
Oct 10, 2024 06:40 AM IST

மகர ராசிக்கு ஐந்தாம் இடமான ரிஷபத்தில் உள்ள குரு பகவான் சுப பலன்களை கொடுத்து வந்தார். குரு பகவான் வக்கிரம் பெற்ற பின்னர் சில வம்புகளை சந்திக்க வேண்டி வரும்.

’வக்ரம் பெற்றார் குரு! வம்புகள் காத்திருக்கிறது! ஜாக்கிரதை!’ மகரம் ராசிக்கான குரு வக்ர பலன்கள்!
’வக்ரம் பெற்றார் குரு! வம்புகள் காத்திருக்கிறது! ஜாக்கிரதை!’ மகரம் ராசிக்கான குரு வக்ர பலன்கள்!

மகர ராசிக்கு ஐந்தாம் இடமான ரிஷபத்தில் உள்ள குரு பகவான் சுப பலன்களை கொடுத்து வந்தார். குரு பகவான் வக்கிரம் பெற்ற பின்னர் சில வம்புகளை சந்திக்க வேண்டி வரும். 

இந்த காலகட்டத்தில் உங்கள் முயற்சிகள் வழியில்  புகழ், லாபம் கெட வாய்ப்புகள் உள்ளது. இதனால் மகரம் ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். கடன், பேச்சு, இடமாற்றம் உள்ளிட்டவற்றில் மிக கவனமாக இருக்க வேண்டும். அதிக ரிஸ்க் எடுக்கும் வகையிலான முயற்சிகளை இந்த காலத்தில் தவிர்க்க வேண்டும். இதனால் உங்கள் புகழுக்கு பங்கம் உண்டாகலாம். 

இந்த காலத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் குறையலாம் என்பதால் மிக கவனமாக இருக்க வேண்டும். அதிர்ஷ்டங்கள் நிலைக்க பகவான் அருள் தேவை. 

மகரம் லக்னம் மற்றும் ராசி அதிபதியாக உள்ள சனி பகவான் கும்பம் ராசியில் ஆட்சி பெற்று வக்ர நிலையில் உள்ளார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி பகவான் உள்ளார். அதே சமயம் உங்கள் ராசிக்கு யோகத்தை கொடுக்கக்கூடிய சுக்கிரன் பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்று உள்ளது நன்மைகளை தரும். 

6 மற்றும் 9ஆம் இடங்களுக்கு உரிய புதன் பகவான் 8ஆம் இடத்து அதிபதி உடன் சேர்ந்து ஆட்சி பெற்று உள்ளார். இதனால் சற்று பயம், குழப்பம் ஆகியவை உண்டாகலாம். ஆனாலும் உங்கள் திறனில் நிபுணத்துவம் வெளிப்படும். 

சில செயல்பாடுகள் எடுத்ததும் புரியாமல் போகலாம், ஆனாலும் தொடர் செயல்பாடுகள் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். 4 மற்றும் 11ஆம் இடத்திற்கு உரிய கேது பகவானும் அங்கு உள்ளார். இதனால் மிகுந்த சிந்தனைகளில் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்டம், யோகம் கிடைக்கும். ஆனாலும் அதனை தக்க வைப்பது கடினமாக இருக்கும். இதனால் உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க பாருங்கள். 3ஆம் இட ராகு ஆனவர் உங்களை அதிரடி முடிவுகளை எடுக்க வைப்பார் என்பதால் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். புதிய அறிமுகங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். முடிவுகளை எடுக்கும் போது குடும்பத்தினர் ஆலோசனை பெறுவது முக்கியம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. 

3 கிரகங்கள் ஆட்சி மற்றும் உச்சம் பெறுவதால் அதீத நம்பிக்கையால் பிரச்னைகளை சந்திக்கலாம். 6ஆம் இடத்தில் உள்ள செவ்வாய் பகவான் சிறப்புகளை தந்தாலும், அதீத நம்பிக்கைகளால் பிரச்னைகள் உண்டாகலாம். பேராசை உடன் செயல்பட்டால் பெரும் நஷ்டம் உண்டாகலாம். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner