Numerology Number 6: அடடே.. உங்க பிறந்த தேதி 6- ஆ; நீங்கள் செய்ய வேண்டியவை;கூடாதவை! - முழு விபரம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology Number 6: அடடே.. உங்க பிறந்த தேதி 6- ஆ; நீங்கள் செய்ய வேண்டியவை;கூடாதவை! - முழு விபரம்!

Numerology Number 6: அடடே.. உங்க பிறந்த தேதி 6- ஆ; நீங்கள் செய்ய வேண்டியவை;கூடாதவை! - முழு விபரம்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 25, 2023 10:47 PM IST

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட குணநலன்களை கொண்டவர்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட குணநலன்களை கொண்டவர்கள் தெரியுமா?
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட குணநலன்களை கொண்டவர்கள் தெரியுமா?

இதில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். அதாவது சுக்ரன் வலுத்து இருப்பவர்கள் இப்படியும், சுக்ரன் கெட்டுப்போனவர்கள் எளிமையாகவும் இருப்பார்கள். 

இந்த 6ம் எண்ணில் பிறந்தவர்கள் தனிமையை அதிகம் விரும்புவார்கள். அவர்கள் இருக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பலதரப்பட்ட உணவு வகைகளை உண்பதற்கு இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக இனிப்பு மிகவும் பிடிக்கும். ஆடம்பரமாக இருப்பார்கள். கஷ்டமில்லாமல் வாழ நினைப்பார்கள்.

மற்றவர்கள் யாராவது கஷ்டப்பட்டால் இவர்களால் பார்த்து சும்மா இருக்க முடியாது. அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பார்கள். இரண்டாவது குழந்தை பின்பு இவர்களுக்கு வளர்ச்சி இருக்கும். தூரதேசம் சென்றால் இவர்களுக்கு வளர்ச்சி இருக்கும். 

6ம் நம்பரில் பிறந்தவர்களுக்கு அருகில் போலீஸ், ராணுவம் துறையை சேர்ந்தவர்கள் குடிபெயர்வார்கள். இவர்களுக்கு உணவு பழக்க வழக்கங்கள் சரியாக இல்லை என்றால் சர்க்கரை வியாதி வந்து விடும். விளையாட்டில் அதிக ஆர்வம் இருக்கும். குறிப்பாக கிரிக்கெட் பிடிக்கும். மருத்தவர்கள் பற்றி நன்றாகத்தெரியும். அதே போல, மருத்துவம் தொடர்பான விவரங்களும் இவர்களுக்கு அத்துபிடியாக இருக்கும். தன்மானம் அதிகமாக இருக்கும்; பணம் இல்லை என்றால் சோர்ந்து போய் விடுவார்கள். திருச்சானூர் பத்மாவதி தாயாரை வழிபடுவது இவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்