Numerology Horoscope: நவம்பர் 06ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!
நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.
ராசி மண்டலத்தில் உள்ள ராசிகளை கொண்டு ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமையை கணிக்க முடியும் என்பது போலவே நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது. உங்களின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகையே நியுமராலஜி எண்ணாக கணக்கில் கொள்ளப்படுகின்றது. உதாரணமாக, 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நியுமராலஜி எண்ணாக 03 (3 + 0 = 1, 1 + 2 = 3) இருக்கும்.
எண் 1
ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகம் நிறைந்ததாக இருக்கும். அதே வேளையில் வேலை சம்பந்தமாக சில மனக்கசப்புகளை சந்திக்க நேரிடும். அதிக மன அழுத்தம் கொள்ள நேரிடும் என்பதால் பொறுமை முக்கியம். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டு செயல்படுங்கள்.
எண் 2
இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நேர்மறை ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கும். காதல் உறவில் இருப்பவர்கள் உங்கள் துணைக்கு சில ஆச்சரியங்களை தரலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ய நேரிடலாம். கோபத்தை விடுத்து நிதானத்தை கையாள முயலுங்கள்.
எண் 3
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பு மிக்க நாள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். காதல் வாழ்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குழு சார்ந்த பணிகளில் உங்கள் திறன் வெளிப்படும். புதிய திட்டங்களை வழிநடத்த நேரிடலாம்.
எண் 4
நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்தில் மிக கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் ஆசைகளைப் பற்றி உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசுங்கள். உங்கள் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, தேவைப்படும்போது அவற்றை மற்றவர்களிடம் ஒப்படைக்கவும். செலவுகளில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
எண் 5
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டாம். அதனால் இழப்பு ஏற்பட நேரிடலாம். நிதிசார்த விஷயங்களில் கவனம் உடன் செயல்படுவது நல்லது. தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும். உங்கள் துணையுடன் சிறிது நேரம் செலவிடுங்கள்.
எண் 6
ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு காதல் நிறைந்த நாளாக இருக்கும். அதிக வேலை மற்றும் அழுத்தம் உங்கள் மன ஆரோக்கியத்தை மோசமாக்கும். தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையில் சமநிலையை பராமரிக்க வேண்டும். செலவைக் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்.
எண் 7
ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாள். உங்கள் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். தம்பதிகள் இடையே காதல் பிணைப்பு வலுப்படும். சிலருக்கு வேலை நிமித்தமாக வெளிநாடு செல்ல நேரிடலாம்.
எண் 8
எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாள் என்பதால் கவனம் தேவை. யாருடனும் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். தொழில் விஷயத்தில் சிலர் உங்களுக்கு எதிராக திரும்பலாம். உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
எண் 9
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு மங்களம் நிறைந்த நாள் இது. தொழில் மற்றும் பணியிடங்களில் புதிய கூட்டாளர்களுடன் இணைய நல்ல நேரம். உறவினர்கள் இடையே சில சிக்கல்கள் வந்து போகும். நேர்மறை எண்ணத்துடன் செயல்படுங்கள். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்