Numerology Horoscope: நவம்பர் 05ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!
நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

ராசி மண்டலத்தில் உள்ள ராசிகளை கொண்டு ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமையை கணிக்க முடியும் என்பது போலவே நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது. உங்களின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகையே நியுமராலஜி எண்ணாக கணக்கில் கொள்ளப்படுகின்றது. உதாரணமாக, 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நியுமராலஜி எண்ணாக 03 (3 + 0 = 1, 1 + 2 = 3) இருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 23, 2025 11:17 AMகுரு குறி வச்சுட்டார்.. அசைக்க முடியாத பண மழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 23, 2025 07:30 AMராகு பெயர்ச்சி பலன்கள்: பண காற்று வீசப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்ட வரும் ராகு.. உங்க ராசி இதுல இருக்கா?
Apr 23, 2025 05:00 AM'மகிழ்ச்சியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. யார் கவனமாக இருக்க வேண்டும்'ஏப்.23, 2025 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 22, 2025 04:14 PMகொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. புதன் மீன ராசியில் நேரடி பயணம்.. எது உங்க ராசி?
Apr 22, 2025 03:17 PMகன்னி டூ சிம்மம்.. மே 18 -ல் நடக்க இருக்கும் கேது பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் பெறப்போகும் 2 ராசிகள் யார் யார்?
Apr 22, 2025 02:04 PMஉருவான சதுர்கிரஹி யோகம்! தொழில் வளர்ச்சி, பணவரவு.. அடுத்த 15 நாள்கள் மகிழ்ச்சியில் இருக்க போகும் ராசிகள்
எண் 1
ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை சார்ந்த விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். உங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள். காதல் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். இன்றைய அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் அதிர்ஷ்ட எண் 4 ஆகும்.
எண் 2
இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு வெளியிடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சமையலறையில் வேலை செய்யும் போது கவனமாக இருங்கள். சிலருக்கு எதிராராத இடங்களில் இருந்து பண வரவு ஏற்படலாம். வேலை தேடும் மாணவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். இன்றைய அதிர்ஷ்ட நிறம் நீலம், அதிர்ஷ்ட எண் 9 ஆகும்.
எண் 3
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் சில ஏற்ற தாழ்வுகள் உண்டாகலாம். உங்கள் வாழ்கை துணையுடன் சேர்ந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள். இன்றைய அதிர்ஷ்ட நிறம் சிவப்பு அதிர்ஷ்ட எண் 6 ஆகும்.
எண் 4
நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் நிதிசார்ந்த நன்மைகளை பெறுவீர்கள். பணியிடத்தில் அதிக பணிச்சுமையை உணர்ந்தால் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். மனநலனின் அதிக கவனம் செலுத்துங்கள். குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிடுங்கள். இன்றைய அதிர்ஷ்ட நிறம் வெள்ளை அதிர்ஷ்ட எண் 4 ஆகும்.
எண் 5
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம். உங்களுக்கு எதிரான சதி செயல்களில் கவனமாக இருங்கள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். குழுப்பணியில் கவனம் செலுத்துங்கள். காதல் வாழ்க்கை இயல்பாக இருக்கும். இன்றைய அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு, அதிர்ஷ்ட எண் 2 ஆகும்.
எண் 6
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் பழைய நண்பர்களை சந்திக்கலாம். பணத்தை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள், தியானம், யோக பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இன்றைய அதிர்ஷ்ட நிறம் இளஞ்சிவப்பு, அதிர்ஷ்ட எண் 3 ஆகும்.
எண் 7
ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சிறப்பான நாளாக இது இருக்கும். குறித்த காலக்கெடுவுக்குள் உங்கள் பணிகளை முடிக்கவும். வாழ்கை துணையுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய அதிர்ஷ்ட நிறம் பச்சை அதிர்ஷ்ட எண் 5 ஆகும்.
எண் 8
எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நன்மைகள் நிறைந்த நாள் இது. மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வயதானவர்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். வேலையில் சலசலப்பு கூடும். நேர்மறை எண்ணத்துடன் செயல்களை தொடங்கவும். இன்றைய அதிர்ஷ்ட நிறம் பழுப்பு அதிர்ஷ்ட எண் 11 ஆகும்.
எண் 9
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு படைப்பு ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே சமநிலையை பராமரிக்கவும். அதிக வேலை அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தலாம். நேர்மறை எண்ணம் நன்மைகளை கொண்டு வந்து தரும். இன்றைய அதிர்ஷ்ட நிறம் சில்வர் அதிர்ஷ்ட எண் 7 ஆகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
