அதிகரிக்கும் வருமானம்.. எதிர்பாராத செலவு.. பணியிடத்தில் மாற்றம்! ரேடிக்ஸ் 1 முதல் 9 வரை - டிசம்பர் 16 நியூமராலஜி பலன்கள்
Today Numerology 16 December 2024: வருமானம் அதிகரிப்பு, எதிர்பாராத செலவு, பணியிடத்தில் மாற்றம் என ரேடிக்ஸ் எண் 1 முதல் 9 வரை டிசம்பர் 16ஆம் தேதிக்கான நியூமராலஜி பலன்களை தெரிந்து கொள்ளலாம்.
Numerology Horoscope 16 December 2024: ஜோதிடம் போலவே, நியூமராலஜி கணிப்பும் ஒருவரின் எதிர்காலம், இயல்பு மற்றும் ஆளுமை பற்றி கூறுகிறது. ஒவ்வொரு பெயருக்கு ஏற்ப ஒரு ராசி இருப்பதைப் போலவே, நியூமராலஜியிலும் ஒவ்வொரு எண்ணுக்கு ஏற்ப ரேடிக்ஸ் எண்கள்
உங்கள் ரேடிக்ஸ் எண்ணைக் கண்டுபிடிக்க, உங்கள் பிறந்த தேதி, மாதம் மற்றும் பிறந்த ஆண்டு ஆகியவற்றை யூனிட் இலக்கத்துடன் சேர்த்து, அப்போது வரும் எண், உங்கள் அதிர்ஷ்ட எண்ணாக இருக்கும். உதாரணமாக, மாதத்தின் 7, 16 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ரேடிக்ஸ் எண் என்பது 7ஆக இருக்கும். ரேடிக்ஸ் 1-9 உள்ளவர்களுக்கு டிசம்பர் 16ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்
ரேடிக்ஸ் 1 - ரேடிக்ஸ் 1 உள்ளவர்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறலாம். குடும்பத்தின் பெரியவரிடமிருந்து பணம் பெறலாம். பயணங்களால் நன்மை உண்டாகும். நண்பரிடமிருந்து உதவியை பெறலாம்
ரேடிக்ஸ் 2 - ரேடிக்ஸ் 2 உள்ளவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பணிபுரியும் பகுதியில் வளர்ச்சி இருக்கும். திடீர் செலவுகளால் திக்குமுக்காடி போவீர்கள். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். நண்பரின் உதவி வருமானத்தை அதிகரிக்க உதவும்
ரேடிக்ஸ் 3 - ரேடிக்ஸ் 3 உள்ளவர்கள் தாயின் உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் பணியிடத்தில் சில முன்னேற்றம் இருக்கலாம். நண்பரின் உதவியால் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் பெருகும்
ரேடிக்ஸ் 4 - ரேடிக்ஸ் 4 உள்ளவர்களின் செலவுகள் குறையும். தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்படும். மன அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்
ரேடிக்ஸ் 5 - ரேடிக்ஸ் 5 உள்ளவர்கள் கல்வி தொடர்பாக மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் கவனம் தேவை. தொழிலில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். அதிக உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். நண்பருடன் சுற்றுலா செல்ல நேரிடலாம். செலவுகள் அதிகரிக்கும்
ரேடிக்ஸ் 6 - ரேடிக்ஸ் 6 உள்ளவர்களின் தொழில் நிலை மேம்படும். நண்பரின் ஆதரவு கிடைக்கும். தாயிடமிருந்து பணம் பெறலாம். எழுத்து போன்ற அறிவுசார் படைப்புகள், வருமானத்துக்கு ஆதாரமாக மாறும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்
ரேடிக்ஸ் 7 - ரேடிக்ஸ் 7 உள்ளவர்கள் தங்கள் தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் பணித் துறையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். நண்பரின் உதவியால் வருமான ஆதாரங்கள் அமையும்
ரேடிக்ஸ் 8 - ரேடிக்ஸ் 8 உள்ளவர்கள் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிரமங்கள் சந்திக்க நேரிடலாம் உத்தியோகத்தில் இடம் மாற வாய்ப்பு உண்டு. பணியிடத்திலும் மாற்றம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பெரியவரிடமிருந்து பணம் பெறலாம்.
ரேடிக்ஸ் 9 - ரேடிக்ஸ் 9 உள்ளவர்கள் நண்பரின் உதவியால் வேலை வாய்ப்புகளைப் பெறலாம். நீங்கள் வேறு இடத்துக்கு செல்ல வேண்டியிருக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வருமான நிலை மேம்படும்.
டாபிக்ஸ்