Numerology: ’நீங்க 7, 16 , 25 பிறந்தவரா? ’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்! நியூமராலஜி ரகசியங்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology: ’நீங்க 7, 16 , 25 பிறந்தவரா? ’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்! நியூமராலஜி ரகசியங்கள்!

Numerology: ’நீங்க 7, 16 , 25 பிறந்தவரா? ’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்! நியூமராலஜி ரகசியங்கள்!

Kathiravan V HT Tamil
Feb 03, 2024 01:56 PM IST

“Numerology Benefits: இயேசு கிறிஸ்து, ஆதி சங்கரர், ரவீந்திரநாத தாகூர் ஆகியோர் இந்த 7ஆம் எண் ஆதிபத்தியத்தில் பிறந்தவர்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்”

7 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள்
7 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள்

நியூமரலாஜியில், ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் ஆற்றல் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த எண்கள் ஒருவரின் பிறந்த தேதி, பெயர் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களுடன் தொடர்புடையவையாக உள்ளது.

நியூமரலாஜி மூலம் ஒரு நபரின் ஆளுமை, திறன்கள், அவரது வாழ்கையின் சவாலான பகுதிகள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை பற்றி அறிய முடியும். இது ஒரு நபரின் ஆளுமை மற்றும் திறன்களைப் பற்றிய தெளிவான புரிதலை அறிய உதவுகிறது.

ஒரு நபரின் வாழ்க்கையில் உள்ள சவால்களையும் வாய்ப்புகளையும் அடையாளம் காண நியுமராலஜி உதவுகிறது. ஒரு நபருக்கு தங்கள் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் வழிகாட்டுதல்களை இதன் மூலம் பெறலாம். ஒரு தனி நபர் தான் அடைய விரும்பும் இலக்கை அடையும் உத்வேகத்தை நியூமரலாஜி வழங்குகிறது.

7,  16 , 25  ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள் இதோ:-

  • 7 ஆம் எண்ணின் ஆதிபத்தியம் பெற்ற கிரகம் கேது ஆகும். 
  • மற்ற எல்லா எண்களும் மனித சக்திக்கு கட்டுபட்டது. ஆனால் இந்த 7 ஆம் எண் மட்டும் தெய்வ சக்திக்கு மட்டுமே கட்டுப்பட்டது. 
  • இயேசு கிறிஸ்து, ஆதி சங்கரர், ரவீந்திரநாத தாகூர் ஆகியோர் இந்த 7ஆம் எண் ஆதிபத்தியத்தில் பிறந்தவர்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.  
  • 7, 16, 25  ஆகிய எண்களில் பிறந்தவர்களுக்கு ஆன்மீகம் சார்ந்த ஈடுபாடு அதிகம் இருக்கும். 
  • 7 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இளமை காலத்தில் மிகுந்த சிரமங்களையும், போராட்டங்களையும் சந்திப்பார்கள். 
  • நடுத்தர வயதிற்கு மேல் பெருத்த யோகங்களையும், பெரும் செல்வத்தையும் பெரும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. 
  • 7ஆம் எண்ணில் பிறந்தவர்கள் தங்களின் கடுமையான உழைப்பில் வந்த பணத்தை, ஏழைகள் நல் வாழ்வு, ஆலயத் திருப்பணிகள், பொதுத் தொண்டு உள்ளிட்ட நற்காரியங்களுக்கு செலவழிப்பார்கள்.  
  • இவர்களது செயல்பாடுகளில் கண்ணியமும், கட்டுப்பாடும் மிகுந்து இருக்கும். 
  • இருப்பினும் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்காது. அடிக்கடி வேதனைகளும், சோதனைகளும் இவர்களைத் தொடர்ந்து வரும். 
  • சினிமா நட்சத்திரங்கள், பாடகர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், புகழ் பெற்ற எழுத்தாளர்கள், ஆன்மிகவாதிகள், ஜவுளி, பெட்ரோல், டீசல், குளிர்பான துறைகள் இவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.  
  • திரவ சம்பந்தப்பட்ட அனைத்துத் தொழில்களும் இவர்களுக்குப் பெருத்த லாபங்களை அளிக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்