’ஆட்டம் ஆரம்பம்! பணத்தால் மிரள வைக்க போகும் மேஷம் ராசி!’ 2025ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு ராசிபலன்கள்!
New Year Rasipalan 2025: செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட மேஷம் ராசிக்காரர்கள் கம்பீரம் மற்றும் சுயமரியாதையின் அடையாளமாக விளங்குவார்கள். செய்யும் செயலால் கௌரவம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள்.
வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 2025ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி அன்று குரு பகவான் ரிஷபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அடுத்து வரும் மே 18 ஆம் தேதி மீன ராசியில் இருக்கக்கூடிய ராகு பகவான், கும்ப ராசிக்கும், கன்னி ராசியில் இருக்கக்கூடிய கேது வந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
ஒரு ராசியில் நீண்டநாள் இருந்து தாக்கம் செலுத்தும் சனி பகவான், குரு பகவான், ராகு, கேது பகவான் ஆகியோரின் பெயர்ச்சி நடக்கும் ஆண்டாக 2025ஆம் ஆண்டு உள்ளது.
மேஷம்
செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட மேஷம் ராசிக்காரர்கள் கம்பீரம் மற்றும் சுயமரியாதையின் அடையாளமாக விளங்குவார்கள். செய்யும் செயலால் கௌரவம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள். மேஷ ராசியை பொறுத்தவரை அஸ்வினி 4 பாதம். பரணி 4 பாதம், கார்த்திகை முதல் பாதங்கள் உள்ளது.
11ஆம் இடமான மீனம் கும்பம் ராசியில் உள்ள சனி பகவான் 12ஆம் இடமான மீனம் ராசியில் இடம்பெற உள்ளதால் ஏழரை சனி பாதிப்பு தொடங்குகின்றது. விரைய சனி என்பதால் பெரிய பாதிப்புகள் இல்லை என்றாலும் சுப விரையங்கள் இருந்து கொண்டே இருக்கும். வரவு செலவில் மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. உங்கள் வருமானங்களை திறமையான முதலீடாக மாற்றிக் கொள்வதில் உங்கள் திறமை உள்ளது. திருமணம், சொத்து, வீடு, மனை, வாகனம் உள்ளிட்டவைகள் வாங்க வாய்ப்புகள் உண்டாகும். ஒவ்வொரு செலவுகளையும் சுப செலவுகளாக மாற்றுவதன் மூலம் விரைய சனி பாதிப்பை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
மேலும் இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால், குடும்பத்தில் சில சலசலப்புகள் வரலாம். பேச்சில் மிக கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விடால் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். சிலருக்கு வெளிநாடுகளில் இருந்து பணவரவு உண்டாகும். உங்கள் ராசிக்கு 6ஆம் இடமான கன்னி ராசியை சனி பார்க்கிறார்.
ஆறாம் இடத்தில் ஒரு பாவக்கிரகம் இருந்தாலோ அல்லது ஆறாம் இடத்தை ஒரு பாவக்கிரகம் பார்த்தாலோ கடன், நோய், எதிரி தொல்லைகள் நீங்கும். கடன் தொல்லையில் இருப்பவர்களுக்கு கடன்கள் தீரும். நீண்ட காலமாக இழுபறியில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும். உங்களை எதிர்த்தவர்கள் அடங்கி போகும் காலம் இது.
நோய் பாதிப்புகள் தீரும், மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்களுக்கு உடல் நலம் ஆரோக்கியம் பெறும். வேலை தேடும் மற்றும் வேலை இழந்த மேஷம் ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் ராசிக்கு 9ஆம் இடத்தை சனி பகவான் பார்க்கிறார். இதனால் தந்தையின் உடல்நிலையில் மிக கவனம் தேவை. குடும்பத்தினர் உடல்நலனின் மேஷம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறிய மருத்துவ பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும்.
தொழில் மற்றும் உத்யோகத்தில் பணி சுமைகள் இருக்கும். பசி, தூக்கத்தை தாண்டி வேலை செய்ய வேண்டி வரும். தொழில் மற்றும் வேலையில் செலவுக்கு ஏற்ற வருவாயை உண்டாக்கி தரும்.
குரு பெயர்ச்சி
மூன்றாம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இருக்கும் வேலையை விட்டுவிட்டு புதிய வேலையை தேடும் நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும். சிலருக்கு பதவி, பட்டம், பொறுப்புகள் கிடைக்கும். அதே போல் இருக்கும் நிறுவனத்தைவிட்டு புதிய நிறுவனத்திற்கு செல்ல விரும்புவர்கள் வேலைக்கான உத்தரவாதம் கிடைக்கும் வரை கவனமாக இருக்க வேண்டும். குலதெய்வத்திற்கு முடிக்காணிக்கை அளிப்பது நன்மைகள் தரும்.
குருவோட பார்வை ராசிக்கு ஏழாம் வீட்டை பார்ப்பதால் திருமண முயற்சிகள் கைக்கூடும். தள்ளிப்போன திருமணங்கள் விரைவில் நிச்சயம் ஆகும். தொழிலில் கூட்டாளிகள் பக்கபலமாக இருப்பார்கள். தொழில் கூட்டாளிகள் உடன் இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும். வாழ்கை துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும். ராகு, கேது பெயர்ச்சிக்கு பிறகு, தொழில் மிக சிறப்பாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் மிகப்பெரிய லாபம் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.