Guru Peyarchi 2024: பொருளாதார நிலை மேம்படும்..! வருமானம் உண்டா? ரோகிணி நட்சத்திரனருக்கு குரு பெயர்ச்சி பலன்கள்
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ரிஷப ராசியினருக்கு குரு பெயர்ச்சி 2024 காலத்தில் கிடைக்கப்போகும் பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடையும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியையும் பார்வையிடுகிறார்.
ரிஷப ராசியில் இருக்கும் ரோகிணி நட்சத்திரம் சந்திரணின் நட்சத்திரமாக இருந்து வருகிறது.
குரு பெயர்ச்சியால் ரோகிணி நட்சத்தினர் பெறும் பலன்கள்
ராகு திசையில் இருக்கும் ரோகிணி நட்சத்திரகாரர்கள் முயற்சிக்கு ஏற்ற வெற்றியை பெறுவீர்கள். படிப்பு, வேலை வாய்ப்புக்காக சிறப்பாக அமையும். வெளிநாடு வேலை வாய்ப்புகளை கொடுக்கும்.
திருமண வாய்ப்புகள் கைகூடும் காலமாக இருந்து வருகிறது. காதலித்து வருபவர்கள் வீட்டில் திருமணத்தை பற்றி பேசும் காலமாக உள்ளது. திருமணமாகி கணவன் - மனைவி இடையே இருந்த விரிசல்கள் அகலும்., திருமண சிக்கல்கள் அகலும்.
வேலை மாற்றம், இடம் மாற்றம், தொழில் மாற்றம் என எது வேண்டுமானாலும் நிகழலாம். இதன் காரணமாக பொருளாதர தடை ஏற்படும். யாரிடமும் பணம் கொடுத்த ஏமாற வேண்டாம்.
குரு திசையில் இருக்கும் நபர்களுக்கு பெரிய அளவில் நன்மை இல்லாவிட்டாலும், தீமைகளும் இருக்காது. தொழில் சார்ந்த சுப கடன்களை வாங்குவீர்கள். பிள்ளைகளுக்கு வேண்டிய உதவியை செய்வீர்கள். உறவுகளால் இருந்த மனகசப்புகளும், மன அழுத்தங்கள் நீங்கும்.
வேலை இடங்களில் அமைதியை கடைப்பிடிப்பதில் நன்மை பயக்கும். பதவி உயர்வு போராடி கிடைக்கும். பெரிய அளிவில் முதலீடு செய்வதை தவிருங்கள்.
சனி திசையில் இருப்பவர்களுக்கு பெரிய தொல்லைகள் இருக்காது. பண விரயம் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருங்கள். வீ\டு கட்டும் யோகம் உண்டு. வருமானம், செலவு சமமாக இருக்கும். பெரிய அளவில் லாபம் இருக்காது.
புதன் திசையில் இருப்பவர்கள் இந்த குரு பெயர்ச்சியில் நல்ல வளர்ச்சியை பெறுவார்கள். ]உங்களுக்கு வந்து சேர வேண்டிய பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். சகோதரர்கள் வழியில் இருந்த பிரச்னைகள் தீர்வுக்கு வரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். நோய் நொடி பிரச்னைகள் தீர்வுக்கு வரும். மருத்துவ செலவுகள் இருந்தால் குறையும் வாய்ப்பு உள்ளது. பிரஷர், ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதால் உணவில் கவனம் தேவை
தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை பெரிய அளவில் யாரிடமும் விவாதம் செய்ய வேண்டாம். எதிர்பாராத பயணங்கள் அமையலாம். அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்கள் எதிரிகள் உங்களை வீழ்த்தை வாய்ப்பு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல செல்வாக்கு உயரும். நண்பர்களால் மகிழ்ச்சி இருக்கும். ஆன்மிக தரிசனத்தை மேற்கொள்வீர்கள். வேலை மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் போன்றோருக்கும் நல்ல காலமாக இருக்கிறது. இஷ்ட தெய்வம், குல தெய்வத்தை வழிபட்டால் சிறப்பான பலனை பெறலாம்.
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்