Maha Kaliamman: காளிக்கு எருமை கிடா பலி பூஜை
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Maha Kaliamman: காளிக்கு எருமை கிடா பலி பூஜை

Maha Kaliamman: காளிக்கு எருமை கிடா பலி பூஜை

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 24, 2022 05:40 PM IST

எருமைகிடா பலி கொடுக்கும் பூஜை நடக்கும் நாமக்கல் ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

ஸ்ரீ மகாகாளி அம்மன்
ஸ்ரீ மகாகாளி அம்மன்

ஸ்ரீ மகாகாளியம்மன் கோயில் உள்ளே சென்றால் புற்றுடன் நாகபாம்பு தெய்வமும் இடது புறம் சிறியதாக சிவலிங்கமும் அங்கு அமைந்துள்ளன. காளியம்மனுக்கு நேராக சிங்கம் காட்சி தருகிறது. இதனை அடுத்து கோயில் கருவறையில் மண் திட்டாலான காளியம்மனும், பெரிய காளியம்மனும் பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.

மேலும் கோயிலின் வளாகத்தின் வலது புறம் சுமார் 32 அடி உயரத்தில் அரக்கனை வதம் செய்வதற்கு புறப்பட தயாராக இருக்கும் ஸ்ரீ மகாகாளி அம்மன் உருவ சிலை காணப்படுகிறது. திருமணமான பெண்கள் குழந்தை வரம் கேட்டு கோவிலின் பின்புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாக கன்னியம்மனை தரிசனம் செய்து வழிபட்டு அருகில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதங்களில் நடைபெறும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகின்றன. அன்றைய திருவிழாவின் நள்ளிரவு எருமைகிடா பலி கொடுக்கும் பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஸ்ரீ மகாகாளி அம்மனை நினைத்து வழிபட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேறினால் அம்மனுக்கு ஆலயத்தில் மணிக்கட்டியும், வேல் ஈட்டியும் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துகின்றனர்.

Whats_app_banner