Lord Nagaraja: என்ன ஆச்சரியம்..!- நாகராஜரை வணங்கினால் தோல்வியாதிகள் குணமாகுமா?
தோல் வியாதிகளை போக்கக்கூடிய கடவுளாக நாகராஜர் வழங்கி வருகிறார்.
அனைத்து விதமான சிக்கல்களுக்கும் ஆன்மீகத்தில் வழி உண்டு. பல்வேறு விதமான சிக்கல்களுக்கு அருமருந்தாகக் கோயில்கள் விளங்கி வருகின்றன. அந்த வகையில் கேரள மாநிலத்தில் தோல் வியாதிகளை போக்கக்கூடிய திருக்கோயில் ஒன்று அமைந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் பாம்பு மேக்காடு என்ற ஊரில் நம்பூதிரி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் வாசுகி, நாகயச்சி ஆகியோரின் நாக உருவத்தைச் சிலையாக வைத்து தனது வீட்டிலேயே பூஜை செய்து வந்துள்ளார்.
திடீரென ஒரு நாள் நம்பூதிரிக்கு தனது சருமத்தில் வியாதி ஏற்பட்டு உடலில் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் பல்வேறு மருத்துவர் நாடியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. பல்வேறு மருந்துகளைச் சாப்பிட்டும் அந்த சரும வியாதி குணமாகவில்லை.
அந்த நம்பூதிரி வணங்கும் நாகர் சிலைகளில் தீபத்திலிருந்து வரும் கரும் புகைகள் படிந்திருந்தன. அதனால் அந்த சிலைகள் கருமை நிறத்தில் காட்சி கொடுத்தனர். உடனே இதனைக் கண்ட அவர், தன் கைகளால் அந்த சிலைகளின் மீது படிந்திருந்த கரும்புகையை துடைத்துள்ளார்.
உடனே அந்த கருப்பு மை அவரின் கைகளில் பட்டு, அவரே அறியாத வண்ணம் உடல் முழுவதும் வேகமாகப் பரவியுள்ளது. உடனே இதனைக் கண்டு நம்பூதிரி, அதனைத் துடைத்துள்ளார். திடீரென்று பார்க்கும்போது அவர் தொழிலிருந்த நோய் நல்ல விதமாகக் குணமடைந்து இருந்தது. இதனைக் கண்டு அவர் ஆச்சரியம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த பாண்டிய நாட்டின் மன்னர் ஒருவர், எனக்கும் பல ஆண்டுகளாகச் சரும வியாதி இருந்து வருகிறது, எனவே கேரளாவில் இருந்து அந்த நம்பூதிரியை அழைத்து வாருங்கள் என உத்தரவிட்டுள்ளார். உடனே மன்னனின் சிக்கலைத் தீர்ப்பதற்காக நம்பூதிரி சிலையின் மேல் இருந்த மையைச் சிறிது எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.
அவர் மந்திரத்தைச் சொல்லி பாண்டிய மன்னனின் உடலில் அந்த மையைத் தடவியதும் அவரது சருமம் குணமடைந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த மன்னர், அவருக்குப் பொன்னும் பொருளையும் அள்ளி கொடுத்தார்.
இந்நிலையில் கோயில்களில் வீற்றிருக்கும் நாகராஜர் சருமத்தில் ஏற்படக் கூடிய வியாதிகளைத் தீர்ப்பார் எனப் பக்தர்கள் இன்று வரை நம்பி வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்