Money Luck: ’துலாம் முதல் மீன லக்னம் வரை!’ உங்களை பண மழையில் நனைய வைக்கும் கிரகங்களும், பலன்களும்…!
Money Luck: லக்னத்தில் தனாதிபதி இருந்தால் ஜாதகருக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற் ஆசை அதிகமாக இருக்கும். ஜாதகரின் கண்ணோட்டம் பணம் சார்ந்ததாகவே இருக்கும்.
பணத்தை தனத்தை விரும்பாத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது. ஒரு ஜாதகத்தின் பொருளாதார நிலையை தீர்மானிக்க தனாதிபதிய முக்கியம். எந்த ஒரு ஜாதகத்திற்கும் குரு பகவான் மற்றும் தனாபதிபதி வலுபெற்று இருந்தால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மேலும் பொருளாதார ரீதியிலான தோல்விகள் மிக குறைவாகவே இருக்கும். லக்னத்தில் தனாதிபதி இருந்தால் ஜாதகருக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற் ஆசை அதிகமாக இருக்கும். ஜாதகரின் கண்ணோட்டம் பணம் சார்ந்ததாகவே இருக்கும்.
துலாம் முதல் மீனம் வரையிலான லக்னங்களுக்கு தனாத்பதி லக்னத்தில் அமர்வதால் ஏற்படும் பலன்கள்:-
துலாம்
துலாம் லக்னத்திற்கு தனாதிபதி செவ்வாய் பகவான் ஆவார். குடும்பம் ஏற்பட்ட பிறகு பொருளாதாரம், வளர்ச்சி, முன்னேற்றம், அதிகாரம், பதவி, யோகம் உள்ளிட்டவை அமையும். லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு மற்றும் வாகனம் உண்டாகும். பல தொழில்கள் செய்து வருமானம் பெறுவர். அதிகாரத்தில் இருப்பவர் வாழ்கை துணையாக இருப்பார்.
விருச்சிகம்
விருச்சிக லக்னத்திற்கு தனாதிபதியாக குரு பகவான் உள்ளார். 2 மற்றும் 5க்கு உரிய குரு பகவானால் செல்வம் சேர்க்கை உண்டாகும். யோகம், முன்னேற்றம், பொருளாதார வசதி, புத்திர சந்தான விருத்தி ஏற்படும்.
தனுசு
தனுசு லக்னத்துக்கு தனாதிபதி சனி பகவான் ஆவார். சனி பகவான் லக்னத்தில் அமர்வது சற்று பலவீனம் ஆகும். நிதானமாக செயல்படுவார்கள் என்றாலும் பொருளாதாரத்தில் நல்லது நடக்கும். தொழிலில் மேன்மை, வளர்ச்சி, முன்னேற்றம் கிடைக்கும்.
மகரம்
மகர லக்னத்துக்கு லக்னாதிபதியே சனி பகவான் என்பதால் சொந்த முடிவுகள் மூலம் வாழ்கையில் முன்னேற்றம் அடைவார்கள். நிதானமாக செயல்பட கூடிய இவர்கள் பணம் செலவழிப்பதில் கவனமாக இருப்பார்கள். அசையா சொத்துக்கள் சேர்க்கை, விவசாயம் மூலம் ஆதாயம். பழைய பொருட்கள் மூலம் லாபம், கலைப்பொருட்கள் மூலம் லாபம் உண்டாகும்.
கும்பம்
கும்ப லக்னக்காரர்களுக்கு தனாதிபதி குரு பகவான் ஆவர். குரு பகவான் லக்னத்தில் அமர்வது பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரும். பதவி, பட்டம் கிடைத்து வாழ்கையில் ஏற்றம் பிறக்கும். லாபமேன்மை, குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருக்கும்.
மீனம்
மீன லக்னத்துக்கு தனாதிபதியாக செவ்வாய் பகவான் உள்ளார். இவர் லக்னத்தில் அமர்வதால் அதிகாரம், பதவி, அந்தஸ்து, மருத்துவத்துறையில் சாதனை, கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ், ரியல் எஸ்டேட் தொழில்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம், தனவரவு உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.