Jothi Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ பணம் கொட்டும் ஜோதி யோகம் யாருக்கு?
”சந்திரன் பூரண ஒளியோடு இருக்கும் பௌர்ணமி நாளில் பிறந்தவர்கள் அரசாளும் யோகம் கொண்டவர்களாக இருக்கின்றனர்”
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம் ஆகிய யோகங்களுக்கு மத்தியில் ஜோதி யோகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஜோதி யோகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் எந்த இடத்தில் அமைந்துள்ளன என்பதைப் பொறுத்து, அதன் பலன்கள் மாறுபடும். ஒருவரின் ஜாதகத்தில் பல யோகங்கள் அமைந்திருந்தால், அது அந்த நபருக்கு மிகப்பெரிய நன்மைகளைத் தரும்.
பௌர்ணமி காலத்தில் சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும்போது பிறந்தவர்களுக்கு ஒளி யோகம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
இந்த அமைப்பில் பிறந்தவர்கள் மற்றவர்களை காட்டிலும் உயர்ந்த இடத்தை பிடிப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
சந்திரன் பூரண ஒளியோடு இருக்கும் பௌர்ணமி நாளில் பிறந்தவர்கள் அரசாளும் யோகம் கொண்டவர்களாக விளங்குவார்கள்.
பௌர்ணமி சந்திரன் தனது வலிமை குன்றாமல், முழு சுபராக இருந்தால் அந்த ஜாதகருக்கு சந்திர தசை சிறப்பாக அமையும் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.
ஒருவரது ஜாதகத்தில் சூரியன், சந்திரன் நேர்க்கோட்டில் இருந்தாலும் ஜாதகர் பௌர்ணமிக்கு மறுநாள் பிறந்து இருக்க கூடாது. ஆனால் பௌர்ணமிக்கு முதல் நாள் பிறந்து இருந்தால் மிகச்சிறப்பான பலன் உண்டு என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ஜோதி யோகங்கள் ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டுள்ளது. என்றாலும், அவை ஒருவரின் வாழ்க்கையில் வெற்றிக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. ஒருவரின் கடின உழைப்பு, திறமைகள் மற்றும் தர்மம் ஆகியவை அவற்றின் வெற்றிக்கு முக்கியமான காரணிகளாகும்.
டாபிக்ஸ்