Career Horoscope: ’பணம் கொட்ட மேஷ ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்’
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Career Horoscope: ’பணம் கொட்ட மேஷ ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்’

Career Horoscope: ’பணம் கொட்ட மேஷ ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்’

Kathiravan V HT Tamil
Feb 06, 2024 08:36 AM IST

”Mesham Rasi: ஆண் ராசியாகவும், நெருப்பு ராசியாகவும் விளங்கும் மேஷ ராசிக்காரர்களுக்குரிய கிரகம் செவ்வாய் ஆகும். இவர்கள் முருகப்பெருமானை வணங்கி வர வெற்றிகள் குவியும்”

மேஷம் ராசி
மேஷம் ராசி

மேஷ ராசிக்காரர்கள் தலைமைத்துவ பண்புகள் கொண்டவர்கள். இவர்கள் தைரியசாலிகள் மற்றும் எதையும் எதிர்கொள்ள தயங்காதவர்கள்.

மிகவும் சுறுசுறுப்பானவர்களாக செயல்படும் இவர்களுக்கு எப்போது, எதிர்காலத்தை பற்றி சிந்தனை இருக்கும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள இவர்கள் ஆர்வம் கொண்ட இவர்கள் தொழிலில் நேர்மையாக செயல்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டை கொண்டவர்களாக இருப்பர்.

12 ராசிகளில் மிகவும் இளமையான ராசியாக மேஷம் விளங்குகிறது. மேஷ ராசியில் பிறந்த நபர்கள் வலிமையானவர்கள் என்பதால் அவர்களின் விருப்பங்களும் வலிமையாக இருக்கும். இவர்களுக்கு எப்போது, துடிப்பு, உற்சாகம் மற்றும் போட்டி மனப்பான்மை இருந்து கொண்டே இருக்கும். 

முதல் போடலாமலேயே லாபம் பார்க்கும் கமிஷன் அடிப்படையிலான தொழில்களில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். 

இயல்பிலேயே அதிக துணிச்சலை கொண்டவர்களாக விளங்கும் மேஷ ராசியினர் சாவல்களும், ஆபத்துகளும் மிகுந்த காவல்துறை, தீயணைப்பு, ராணுவம் துறைக்கு சென்றால் அதிக புகழ்பெற்று விளங்க முடியும்.

மக்கள் தொடர்பை ஏற்படுத்த கூடிய பத்திரிக்கை மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகிய துறைகள் இவர்களுக்கு பெரும் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும் கொடுக்கும். 

அதிக சாதூர்யம் கொண்ட ராசியாக மேஷம் விளங்குவதால் தொழில்முனைவோரகவும், நிறுவன மேலாளர்களாகவும் மேஷ ராசியனர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

ஆண் ராசியாகவும், நெருப்பு ராசியாகவும் விளங்கும் மேஷ ராசிக்காரர்களுக்குரிய கிரகம் செவ்வாய் ஆகும். இவர்கள் முருகப்பெருமானை வணங்கி வர வெற்றிகள் குவியும்.

Whats_app_banner

டாபிக்ஸ்