Guru Vagra Peyarchi 2024: ‘குவா குவா சத்தம் கேட்கும்! மனைவியால் யோகம் உண்டாகும்!’ மீனம் ராசி வக்ர பெயர்ச்சி பலன்கள்!
Guru Vagra Peyarchi 2024: மீனம் ராசியின் அதிபதியாக குரு பகவான் உள்ளார். மீனத்திற்கு மூன்றாவது வீடான ரிஷபம் ராசியில் குரு பகவான் தற்போது உள்ளார். மீனத்திற்கு 3ஆம் இடம் என்பது மறைவு ஸ்தானம் ஆகும். மீனம் ராசியில் உள்ள ராகு குருவை பார்க்கிறார்.
குரு பகவான் ஆனவர் வரும் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரை 119 நாட்கள் வக்ரம் பெற உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் வலுவாக இருக்கும்போது, ஜாதகர் சத்தியத்தின் பாதையில் செல்வார். கண்கள் மற்றும் முகத்தில் ஒரு பிரகாசமான தோற்றம் இருக்கும். ஒரு மனிதனின் ஒழுக்கத்தை சிறப்பாக தரக்கூடிய கிரகம் குரு ஆகும். பெருமை, மேன்மை, தனம், செல்வாக்கு, கல்வி, குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தரும் கிரமாக குரு உள்ளார். இயற்கை சுபர் ஆக உள்ள குரு பகவான் பெருந்தன்மை குணத்திற்கு சொந்தக்காரர்.
மீனம் ராசியின் அதிபதியாக குரு பகவான் உள்ளார். மீனத்திற்கு மூன்றாவது வீடான ரிஷபம் ராசியில் குரு பகவான் தற்போது உள்ளார். மீனத்திற்கு 3ஆம் இடம் என்பது மறைவு ஸ்தானம் ஆகும். மீனம் ராசியில் உள்ள ராகு குருவை பார்க்கிறார். 7ஆம் இடத்தில் உள்ள கேது பகவான் உள்ளார். 12ஆம் இடத்தில் சனி பகவான் உள்ளார்.
ஒருவருக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, தர்ம சிந்தனை, கௌரவம் தருவதில் குருவின் பங்கு முக்கியம் ஆகும். இதனால் எதிர்பாராத நன்னைகள், திடீர் திருப்பங்கள், ஐஸ்வரியம் ஆகிய நன்மைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்திற்கு உரியவராகவும் குரு பகவான் உள்ளார். குருவினுடைய பார்வை 7, 9, 11ஆம் வீட்டில் படுகின்றது.
7ஆம் இடத்தை பார்க்கும் குரு பகவான் மனைவி, தொழில் கூட்டாளிகள் வழியில் நன்மைகளை ஏற்படுத்துவார். வாழ்கை துணை மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்த பிரச்னைகள் தீரும்.
மருந்து, மருத்துவம், அரசு, அரசு சார்ந்த துறையில் இருப்பவர்கள் தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும். மூத்த சகோதரர் மற்றும் சகோதரிகள் வழியில் நன்மைகள் உண்டாகும். நஷ்டமான பொருள்கள் மீண்டும் கிடைக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். பொன் வேலை செய்பவர்களுக்கு ஏற்ற மிகுந்த காலம். செல்வாக்கு மிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். தாய் மீது அன்பு கூடும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சமூகத்த்ஜில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும். முன்னோர்கள் சொத்துகளை பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீரும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதார்களுக்கு ஏற்பட்ட உடல் பிரச்னைகள் தீரும். அரசு வழியில் உயர் பதவிகள் கிடைக்கும். ரகசிய உறுப்புகளில் இருந்த நோய்கள் தீரும். நிர்வாகத் திறமை அதிகரிக்கும். திருமணத்தடை முடிவுக்கு வரும். வியாபாரம், தொழில் அமோகமாக இருக்கும்.
வழிபாடு
குரு பகவான் வழிபாடு வாழ்கையில் மேன்மையை தரும். திருச்செந்தூருக்கு தீர்த்த யாத்திரை செல்லுதல் வெற்றியை ஏற்படுத்தி தரும். ஆலங்குடி, தென்குடி திட்டை, சென்னை திருவள்ளி தாயம், காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள காயரோகணேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் அடுத்த அகரம் கோயில், சிவகங்கை பட்டமங்கலம் வெள்ளியங்கி குருஸ்தலம், சோழவந்தான் குருஸ்தலம், குருவித்துறை போன்ற குரு பகவானின் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்ய சங்கடங்கள் தீர்ந்து நன்மைகள் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.