Vadaranyeswarar temple: வதாரண்யேஸ்வரர் கோயிலில் கடைமுக தீர்த்தவாரி விழா
மயிலாடுதுறை மாவட்டம் சிறப்புமிக்க வதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில்களில் வாதாரண்யேஸ்வரர் கோயிலும் ஒன்று. இந்த கோயில் மயிலாடுதுறையில் உள்ள தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். ஆண்டுதோறும் இக்கோயிலில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 18ஆம் தேதி அன்று தீர்த்தவாரி உடன் தொடங்கிய துலா உற்சவம், கடந்த நவம்பர் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் கடைசி பத்து நாட்கள் உற்சவம் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று அக்டோபர் 15ஆம் தேதி நடந்தது. இந்த தேரோட்டத்தில் வதாரண்யேஸ்வரர் பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் அருள்பாலித்தார். இந்த தேரோட்டத்தை தர்மபுர ஆதீன மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சாமிகள் வடம் பிடித்து ஆரம்பித்து வைத்தார்.
தேரோட்டம் முடிவடைந்த நிலையில் தற்போது துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்த விழா இன்று மதியம் நடைபெற்று முடிந்தது.