Mahalaya Amavasai: முன்னோர்கள் ஆசியை பெற்று பெருவாழ்வு வாழ மஹாளய அமாவாசை அன்று செய்ய வேண்டியவை இதுதான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mahalaya Amavasai: முன்னோர்கள் ஆசியை பெற்று பெருவாழ்வு வாழ மஹாளய அமாவாசை அன்று செய்ய வேண்டியவை இதுதான்!

Mahalaya Amavasai: முன்னோர்கள் ஆசியை பெற்று பெருவாழ்வு வாழ மஹாளய அமாவாசை அன்று செய்ய வேண்டியவை இதுதான்!

Kathiravan V HT Tamil
Sep 28, 2024 09:01 PM IST

Mahalaya Amavasai: மகாளய பட்சம் காலம் தொடங்கி புரட்டாசி அமாவாசை வரை 15 நாட்களும் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்பணம் செய்தால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த 14 நாட்கள் கூட எள்ளும், தண்ணீரும் இறைக்காதவர்கள் 15ஆவது நாளான அமாவாசை அன்று தர்பணம் செய்வது சிறப்பை தரும்.

Mahalaya Amavasya: முன்னோர்கள் ஆசியை பெற்று பெருவாழ்வு வாழ மஹாளய அமாவாசை அன்று செய்ய வேண்டியவை இதுதான்!
Mahalaya Amavasya: முன்னோர்கள் ஆசியை பெற்று பெருவாழ்வு வாழ மஹாளய அமாவாசை அன்று செய்ய வேண்டியவை இதுதான்!

அமாவாசையும் முன்னோர்களும்!

நாம் இந்த உலகத்திற்கு வர காரணமாக இருந்த முன்னோர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. மகாளய பட்சம் காலம் தொடங்கி புரட்டாசி அமாவாசை வரை 15 நாட்களும் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்பணம் செய்தால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த 14 நாட்கள் கூட எள்ளும், தண்ணீரும் இறைக்காதவர்கள் 15ஆவது நாளான அமாவாசை அன்று தர்பணம் செய்வது சிறப்பை தரும். 

தர்பணம் செய்வது எப்படி?

கருப்பு எள், தண்ணீர், தர்பை கிடைத்தால் நலம், இல்லை என்றாலும் பிரச்னை இல்லை. அமாவாசை அன்று காலையில் உங்கள் முன்னோர்களை நினைத்து, ‘நான் என்னுடைய குடும்பம் என்னுடைய சந்ததியினர் இன்னைக்கு நாங்க எல்லாரும் நல்லா இருக்கிறோம்னா அதற்கு காரணம் நீங்க தான் உங்களுக்கு நான் ஏதாவது தவறு இழைத்திருந்தால் அல்லது வழிபட மறந்தால் அல்லது வழிபாடு செய்யும் போது சலித்துக் கொண்டால் மன்னித்துக் கொள்ளுங்கள்,  வம்சம் தழைப்பதற்கு முன்னோர்களாகிய நீங்கள் அரணாக இருந்து எங்களை காப்பாற்றுங்கள்' என்று கூறி எள் மற்றும் தண்ணீரையும் இறைக்க வேண்டும். 

அமாவாசை அன்று செய்ய வேண்டிய வழிபாடு 

மஹாளய அமாவசை நேரம் காலை சூரிய உதயத்திற்கு பிறகு தொடங்கி மதியம் 12 மணி வரை வழிபடலாம். 

வரும் அக்டோபர் 2ஆம் தேதி புதன்கிழமை அன்று இந்த ஆண்டு மகாளய அமாவாசை வருகின்றது. காலை 6:00 மணியில் இருந்து 12 மணி வரை தர்பணம் செய்யலாம். காலை 11 மணியில் இருந்து 11 நாள் 45 நிமிஷம் வரை இலை போட்டு வழிபாடு செய்யலாம். 

பின்னர் 1:30 மணியில் இருந்து 2.00 மணிக்குள் இலை போட்டு படைக்கலாம். மாலையில தீபம் ஏற்றுவதற்கான நேரம் 6:00 மணிக்கு மேல் ஆகும். 

கோயில்களில் தர்பணம் செய்தாலும் சூரியனை பார்த்து கும்பிட்ட வேண்டியது முக்கியம்.  

அமாவாசை நாள் அன்று குறைந்தது இரண்டு நபர்களுக்காவது அன்னதானம் செய்வது புண்ணியத்தை ஏற்படுத்தி தரும். அமாவாசை அன்று ஏதாவது ஒரு ரூபத்தில் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். 

சிலரது வசதியை பொறுத்து வரியவர்களுக்கு ஆடைகளை தானம் கொடுக்கலாம். 

காகம் அல்லது புறாக்களுக்கு உணவு கொடுக்கலாம். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்