Magaram Rasipalan: அடுத்த 61 நாட்களுக்கு சுற்றி சுழலும் சூரியன்! மகரம் ராசிக்கு லட்சுமி கடாச்சம் உறுதி!-magaram rasi suriya bagavans influence in september october and november - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Magaram Rasipalan: அடுத்த 61 நாட்களுக்கு சுற்றி சுழலும் சூரியன்! மகரம் ராசிக்கு லட்சுமி கடாச்சம் உறுதி!

Magaram Rasipalan: அடுத்த 61 நாட்களுக்கு சுற்றி சுழலும் சூரியன்! மகரம் ராசிக்கு லட்சுமி கடாச்சம் உறுதி!

Kathiravan V HT Tamil
Aug 30, 2024 08:32 PM IST

தன லாபம் ஏற்பட லக்ஷ்மி தேவி கரம் கொடுப்பாள். ஜெயம் லாபம் ஏற்படுவதற்கு ஜெயதேவி துர்க்கா பரமேஸ்வரியை அதிகமாக வழிபாடு செய்ய வேண்டும்.

Magaram Rasipalan: அடுத்த 61 நாட்களுக்கு சுற்றி சுழலும் சூரியன்! மகரம் ராசிக்கு லட்சுமி கடாச்சம் உறுதி!
Magaram Rasipalan: அடுத்த 61 நாட்களுக்கு சுற்றி சுழலும் சூரியன்! மகரம் ராசிக்கு லட்சுமி கடாச்சம் உறுதி!

சூரிய பகவானின் பயணம் 

செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 61 நாட்கள் சிம்மம், கன்னி, துலாம் ஆகிய மூன்று ராசிகளை சூரிய பகவான் பயணம் செய்கிறார். செப்டம்பர் மாத காலத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு உடலும், மனதும் வலுப்படும் காலமாக இருக்கும். பேச்சு, செயல், நிர்வாகத் திறமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, மரியாதை மேன்மை பெறும். உங்களின் முகப்பொலிவு கூடும். பண வரவு திருப்திகரமான முறையில் இருக்கும். வணிகம், வியாபாரம் உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

பணத்தில் கவனம் தேவை 

புகழை கொடுக்கக்கூடிய சூரிய பகவான் உங்கள் ராசி ராசிக்கு பகை கிரகம் ஆகும். இந்த காலகட்டத்தில் பணப்பிரச்சனைகள் ஏற்படும். பணத்தை கையாளவும், ஒருவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றவும் சிரமப்பட வேண்டி இருக்கும். குறிப்பாக குடும்ப உறுப்பினர்களை சந்தோஷப்படுத்துறது பெரிய கஷ்டமாக இருக்கும். 

இந்த நேரத்தில் மனதில் தேவையில்லாத கவலைகளை வைத்துக் கொள்ளக்கூடாது. உடல் நலனை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். பணத்தட்டுப்பாடு ஏற்பட்டாலும், அம்பாளின் அருள் உள்ளதால் உங்களுக்கு தேவையான பணம் கிடைக்கும். ஆனால் இந்த நேரத்தில் யாரை நம்பியும் வாக்குகளை கொடுக்க வேண்டாம். வாக்குகளை கொடுத்துவிட்டால் நிம்மதி இல்லாமல் தவிக்க வேண்டிய நிலை உண்டாகும். 

மகாலட்சுமி கரம் கொடுப்பாள் 

தன லாபம் ஏற்பட லக்ஷ்மி தேவி கரம் கொடுப்பாள். ஜெயம் லாபம் ஏற்படுவதற்கு ஜெயதேவி துர்க்கா பரமேஸ்வரியை அதிகமாக வழிபாடு செய்ய வேண்டும். மகரம் ராசியின் பத்தாம் வீடான துலாம் ராசிக்கு ஐப்பசி மாதம் வருகிறார். இந்த காலத்தில் காரிய சித்தி, சுகம் கிடைக்கும். 

முன்னெச்சரிக்கை உடன் செயல்பட்டு பிரச்னைகளில் சிக்காமல் தவிர்ப்பீர்கள். உணவில் மிளகை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் தொண்டை தொடர்பான பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். புரட்டாசி மாதத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு கொடுக்கல் வாங்கல் திருப்தியாக இருக்கும். ஆனால் கொடுத்து வாங்கும்போது பகையை சந்திக்க வேண்டிய நிலை உண்டாகும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.