Magaram Rasi: ’பணம் கொட்ட மகரம் ராசியை பாசிட்டிவ் ஆக ஆக்டிவேட் செய்வது எப்படி?’
“Magaram Rasi: மகர ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். மகர ராசிக்காரர்களில் எந்த லக்னத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு லக்னத்திற்கு 10ஆம் இடமான மகரம் பல்வேறு பலன்களை தரக்கூடியது”
’அண்டத்தில் உள்ள அனைத்துமே பிண்டத்தில் உள்ளது’ என்பது ஜோதிட நம்பிக்கை. நமது அன்றாட செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்யும் போது, நமது ராசியை நேர்மைறையாக இயங்க செய்யலாம் என ஜோதிடர்கள் கூறூகின்றனர்.
மகர ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். மகர ராசிக்காரர்களில் எந்த லக்னத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு லக்னத்திற்கு 10ஆம் இடமான மகரம் பல்வேறு பலன்களை தரக்கூடியது.
மகரம் ராசியை சேர்ந்த மேஷ லக்னக்காரர்களுக்கு, தொழில், வேலை, மாமியார் ஆகியவற்றை இந்த இடம் குறிக்கிறது. ரிஷப லக்னக்காரர்களுக்கு, பெயர், புகழ், அடையாளம், அங்கீகாரத்தை குறிக்கிறது. மிதுன லக்னக்காரர்களுக்கு, லாபத்தை குறிக்கிறது. கடக லக்னக்காரர்களுக்கு வாழ்கை துணையை குறிக்கிறது.
சிம்மம் லக்னக்காரர்களுக்கும், எதிரி, நோய், கடன் 10ஆம் இடமான மகரராசி குறிக்கிறது. கன்னி லக்னக்காரர்களுக்கு, புத்திரம், காதல், பரிட்சை, முடிவெடுத்தல் ஆகியவற்றை குறிக்கிறது.
துலாம் லக்னக்காரர்களுக்கு, வீடு வசதி, வாகனம், சுகத்தை குறிக்கிறது. விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு, நட்பு, உறவு, விபத்து, தகவல் தொடர்பு ஆகியவற்றை குறிக்கிறது.
தனுசு லக்னக்காரர்களுக்கு, வருமானம், குடும்பம் ஆகியவற்றை குறிக்கிறது. கும்பம் ராசிக்காரர்களுக்கு, விரையம், கடல்கடந்து செல்லுதல், முக்தி, மோட்சம் ஆகியவற்றை குறிக்கிறது. மீன லக்னக்காரர்களுக்கு ஆசை, அபிலாஷைகளை குறிக்கிறது.
எந்த லக்னமாக இருந்தாலும் மகர ராசியாக இருந்தால் முதலில் பத்தாம் பாவம் ஆக்டிவேட் ஆகிவிடும். இந்த மகரம் நேர்ம்றையாக இயங்க வேண்டும் என்றால், தடை, தாமதங்களை தாண்டி விடாமுயற்சியும், பொறுமையும் அவசியம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
சனி என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வர வேண்டியது பெறுமை, அயராத முயற்சி ஆகும். மந்தகாரகன் என்படும் சனிபகவான் மெதுவாக நகரக்கூடிய கிரகம் ஆகும். ஒரு ஜாதகத்தில் சனி பகவான் எங்கு இருந்தாலும், மோசமான தசாபுத்தி நடந்தாலும், ஒரு விஷயத்தை சனி கொடுத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.
எல்லா விஷயத்திலும் பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை வேண்டும். உண்மையும், நேர்மையும் தவறாமல் இருக்க வேண்டும். எடுத்த காரியத்தை விரும்பி செய்ய வேண்டும். பிடிக்காமல் செய்யும் தொழில்கள் எதுவும் உங்களுக்கு பலன் தராது. நீசவார்த்தைகள் பேசக்கூடாது. பெருத்த கடன்களை வாங்க கூடாது, குருமார்கள் கோபத்திற்கு ஆளாக கூடாது. இலக்கு வைத்து அதை நோக்கி பயணிக்க வேண்டும். மூர்க்கத்தனம், முட்டாள் தனத்தை கைவிட வேண்டும். வேகத்தை உழைப்பில் கொண்டு வந்து போட வேண்டும். வேகம், வேகம் வெறியை உழைப்பில் போட வேண்டும். இப்படி செய்தால் ராசியை நேர்மறையாக ஆக்டிவேட் செய்யலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
டாபிக்ஸ்