Guru Vagra Peyarchi 2024: 'அக்டோபரில் வக்ரம் பெறும் குரு!' அசைக்க முடியாத உச்சம் பெறும் மகரம்! இனி நாமதான்!-magaram rasi and guru bhagwan vakram key benefits in life marriage career and education explained - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Vagra Peyarchi 2024: 'அக்டோபரில் வக்ரம் பெறும் குரு!' அசைக்க முடியாத உச்சம் பெறும் மகரம்! இனி நாமதான்!

Guru Vagra Peyarchi 2024: 'அக்டோபரில் வக்ரம் பெறும் குரு!' அசைக்க முடியாத உச்சம் பெறும் மகரம்! இனி நாமதான்!

Kathiravan V HT Tamil
Oct 01, 2024 04:33 PM IST

Guru Vagra Peyarchi 2024: குரு பகவான் நேர்கதியில் செல்லும் போது தரும் நன்மைகளை விட வக்ரம் பெற்ற காலத்தில் தரும் நன்மைகள் அதிகம் ஆக இருக்கும். மகரம் ராசிக்கு 3, 12ஆம் இடங்களுக்கு அதிபதியான குரு பகவானின் பார்வைக்கு பலம் உண்டு.

Guru Vagra Peyarchi 2024: 'அக்டோபரில் வக்ரம் பெறும் குரு!' அசைக்க முடியாத உச்சம் பெறும் மகரம்! இனி நாமதான்!
Guru Vagra Peyarchi 2024: 'அக்டோபரில் வக்ரம் பெறும் குரு!' அசைக்க முடியாத உச்சம் பெறும் மகரம்! இனி நாமதான்!

மகரம் ராசியினர் சந்தித்த சிரமங்கள் 

நீங்கள் கடமையே செய்தே ஆகவேண்டும் என்கிற கருமத்தோடு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அந்த வாழ்க்கையை வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களா நீங்கள் வாழ்க்கை முழுவதும் ஒழித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலை கடந்த காலங்களில் இருந்து இருக்கும். சோகம் உங்களை சுற்றி இருக்கும். அதிகமாக செலவு செய்யாதவராக இருந்தாலும் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் இவர்கள் இருப்பார்கள். சனி பகவான் வக்ரம் பெற்று உள்ள நிலையில் குரு பகவானும் வக்ரம் பெறுகிறார். மகரத்திற்கு ஐந்தாம் வீட்டில் இருக்கக்கூடிய குரு நிறைய சுப பலன்களை இப்பொழுதுதான் தர ஆரம்பித்திருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களாக குடும்பம், தொழில், கணவன் மனைவி உறவுகளில் பிரச்னைகள் இருந்து இருக்கும். 

வக்ரம் பெற்ற குரு அள்ளித் தர போகிறார்

குரு பகவான் நேர்கதியில் செல்லும் போது தரும் நன்மைகளை விட வக்ரம் பெற்ற காலத்தில் தரும் நன்மைகள் அதிகம் ஆக இருக்கும். மகரம் ராசிக்கு 3, 12ஆம் இடங்களுக்கு அதிபதியான குரு பகவானின் பார்வைக்கு பலம் உண்டு. 9ஆம் இடத்தை அவர் பார்ப்பதால் வெளிநாடு, வெளிமாநிலம், வேறு மொழி பேசுபவர்கள் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். தெய்வ பக்தி கூடும். நட்புக்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். முற்பிறவியில் செய்த புண்ணிய பலன்கள் கிடைக்கும். 

குழந்தை பாக்கியம் கிடைக்கும். திடீர் தனயோகம் உண்டாகும் அரசு ஆதரவு கிடைக்கும். மந்திரிக்கு சமமான பதவி கிடைக்கும். தூர பிரதேசம் தேச வாசம் செய்வீர்கள்.  ஞானிகளுக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்புகளும் திருப்பணி செய்யக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும். 

ராசியை பார்க்கும் குரு பகவான் 

குரு பகவான் மகரம் ராசியை பார்ப்பதால் ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் உண்டாகும். தேக பலம் கூடும். வயிறு சம்பந்தப்பட்ட உபத்திரங்கள் நீங்கும்.எடுத்த காரியத்தல் ஜெயம் ஏற்படும். 11 ஆம் வீட்டையும் குருபகவான் பார்க்கிறார் என்பதால் குடும்பத்தில் வெற்றி உண்டாகும். மகிழ்ச்சி உண்டாகும் தாயிடத்தில் அன்பு கூடும். நஷ்டமான பொருள் மீண்டும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார். பலவிதமான வகைகளில் லாபங்கள் உண்டாகும். சங்கீதம் நடனம் சம்பந்தப்பட்ட துறையில் தொழில் உள்ளவர்கள் பெரும் வெற்றி அடைவார்கள். பெரிய மனிதர்களுடைய நட்பு சகவாசம் உண்டாகும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner