Love Numerology Horoscope: ’இந்த எண்களில் பிறந்தவர்கள் காதல் செய்வதில் வல்லவர்கள்!’ காதல் நியூமராலஜி பலன்கள்!-love numerology horoscope love numerology benefits for those born with numbers 1 to 5 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Love Numerology Horoscope: ’இந்த எண்களில் பிறந்தவர்கள் காதல் செய்வதில் வல்லவர்கள்!’ காதல் நியூமராலஜி பலன்கள்!

Love Numerology Horoscope: ’இந்த எண்களில் பிறந்தவர்கள் காதல் செய்வதில் வல்லவர்கள்!’ காதல் நியூமராலஜி பலன்கள்!

Kathiravan V HT Tamil
Aug 21, 2024 08:55 PM IST

Love Numerology Horoscope: எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

Love Numerology Horoscope: ’இந்த எண்களில் பிறந்தவர்கள் காதல் செய்வதில் வல்லவர்கள்!’ காதல் நியூமராலஜி பலன்கள்!
Love Numerology Horoscope: ’இந்த எண்களில் பிறந்தவர்கள் காதல் செய்வதில் வல்லவர்கள்!’ காதல் நியூமராலஜி பலன்கள்!

எண்  கணித தன்மைகள் 

எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

எண் கணிதத்தின் படி, எண்களுக்கு வாழ்க்கையில் ஒரு சிறப்பு இடம் உண்டு. இது உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய பல விஷயங்களைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நம் பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் வீட்டு எண் அனைத்தும் நம் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

எண் கணித கூட்டுத் தொகை 

காதல் வாழ்க்கையில் கூட, அது தொடர்பான விஷயங்களை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். எண் கணிதத்தின் படி, உங்கள் பிறந்த தேதியின் கூட்டுத்தொகை மூலம் உங்களின் ரேடிக்ஸ் எண்ணைக் கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக நீங்கள் 3, 12, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எனில் உங்கள் நியூமராலஜி எண் 3ஆம் எண்ணாக இருக்கும்.

இந்த எண் கணித முறையில்  திருமணத்திற்கு சிறந்த ஜோடி குறித்து கணிக்கவில்லை. எண்களுக்கு இடையே உள்ள காதல் தொடர்புகளை பற்றிதான் குறிப்பிட்டு உள்ள்லோம். 1 முதல் 5 வரையிலான நியூமராலஜி எண்ணை கொண்டுள்ளவர்களின் காதல் துணைக்கான எண்கள் குறித்து தற்போது பார்க்கலாம். 

எண் 1

1ஆம் எண்ணை தனது நியூமராலாஜி எண்ணாக கொண்டவர்களுக்கு எண் 2, 3, 7 மற்றும் 9 ஆகிய நியூமராலஜி எண்ணில் பிறந்தவர்களிடம் மனம் திறந்து பேசுவார்கள். இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல புரிதல் இருக்கும். 

எண் 2

நியூமராலஜி எண் 2-இல் பிறந்தவர்களுக்கு நியூமராலஜி எண் 1, 3, 4 மற்றும் 6-இல் பிறந்தவரக்ளுடன் நன்றாக ஒத்துப்போவார்கள். சில காலத்திலேயே இவர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்வார்கள்.

எண் 3

நியூமராலஜி எண் 3இல் பிறந்தவர்களுக்கு 1, 2, 5 மற்றும் 7ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் நன்றாக ஒத்துப்போவார்கள். 

எண் 4

நியூமராலஜி எண் 4-இல் பிறந்தவர்கள் 1, 2, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பிறந்த நபர்களுடன் நன்றாக ஒத்துப்போவார்கள். இந்த எண்களில் பிறந்தவர்க ஒருவருக்கொருவர் நல்ல பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். 

எண் 5

ரேடிக்ஸ் எண் 3, 9, 1, 6, 7 மற்றும் 8 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் உடன் நியூமராலஜி எண் 5-இல் பிறந்தவர்கள் உடன் நன்றாக ஒத்துப்போவார்கள். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.