Lottery Yogam: 2024-இல் பணம் கொட்டும் லாட்டரி யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியங்கள்!-lottery yogam features of lottery yogam in horoscope - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lottery Yogam: 2024-இல் பணம் கொட்டும் லாட்டரி யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியங்கள்!

Lottery Yogam: 2024-இல் பணம் கொட்டும் லாட்டரி யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியங்கள்!

Kathiravan V HT Tamil
Jan 21, 2024 02:19 PM IST

”Lottery Yogam: நாம் லாட்டரி எடுக்கும் நாளில் படு பட்சி ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அதிஷ்டம் நமக்கு கிடைக்கும”

லாட்டரி யோகம்
லாட்டரி யோகம்

லாட்டரி யோகம் என்பது ஒருவரது ஜாதகத்தின் 5, 9ஆம் இடங்களுடன் தொடர்புடையதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் ஒருவருக்கு ஐந்தாம் இடம் மட்டும் வலுவாக இருந்தால் லாட்டரி கிடைக்குமா என்று கேட்டால் அதுதான் இல்லை.  

ஒருவருக்கு உழைக்காமல் பணம் கிடைப்பதற்கும், ஜாதக்கத்தில் உள்ள  8 ஆம் பாகத்திற்கும் தொடர்பு உண்டு. இந்த பாவகம் எதிர்பாராத திடீர் நன்மையை கொண்டு வரும் சிறப்புகளை பெற்றது. 

ஒருவரது ஜாதகத்தில் 5 மற்றும் 8ஆம் இட அதிபதிகள் சரியாக அமைந்து இருந்தால் அதிர்ஷ்டம் நிச்சயம் என ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகிறது.  

இது மட்டுமல்லாமல் ஒருவரது ஜாதகத்தில் 2ஆம் இடம் சரியாக இருக்க வேண்டும். இந்த இடம் ஒருவருக்கு செல்வம் ஆனது சொத்தாக இல்லாமல் கையில் காசு பணமாக வந்து சேர்வதை குறிக்கிறது. 

இதே போல ஜாதகத்தில் 11ஆம் இடமும் மிக சரியாக அமைவது அவசியம்.  11ஆம் இடம் என்பது ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. 

2,5,8,11 ஆகிய இடங்கள் சரியாக இருந்தால் திடீர் பணவரவை கொடுக்க கூடிய யோகம் நிச்சயம் உண்டாகும்.  ஜாதகம் சரியாக இருக்கும் பட்சத்தில் ஜாதகத்தில் படு பட்சி என்கிற அமைப்பு சரியாக இருப்பது மிக அவசியம். 

நாம் லாட்டரி எடுக்கும் நாளில் படு பட்சி ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அதிஷ்டம் நமக்கு கிடைக்கும் என ஜோதிடம் கூறுகிறது. 

மேலும் 2,5 ,8, 11ஆம் இடங்களுக்குரிய அதிபதிகள் ஒருவருக்கொருவர் இடம் மாறி பரிவர்த்தனை பெற்று இருந்தாலும் கண்டிப்பாக அதிக செல்வம் சேரும்.  குறிப்பாக லாட்டரி போன்றவற்றால் கோடிக்கணக்கில் பணம் வந்து சேரும் என்கின்றனர் ஜோதிடர்கள். 

Whats_app_banner