Lord Shiva's Favourite : சிவனுக்கு பிடித்த மூன்று ராசிகள் என்ன தெரியுமா? இதனால் அவர்களுக்கு எத்தனை நன்மைகள் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Shiva's Favourite : சிவனுக்கு பிடித்த மூன்று ராசிகள் என்ன தெரியுமா? இதனால் அவர்களுக்கு எத்தனை நன்மைகள் பாருங்க!

Lord Shiva's Favourite : சிவனுக்கு பிடித்த மூன்று ராசிகள் என்ன தெரியுமா? இதனால் அவர்களுக்கு எத்தனை நன்மைகள் பாருங்க!

Priyadarshini R HT Tamil
Jul 28, 2024 11:13 AM IST

Lord Shiva's Favourite : சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளாக இந்த மூன்று ராசிகளும் உள்ளன. இதனால் அவர்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக அவர்களை சனியிடம் இருந்து சிவன் காக்கிறார். அதில் உங்கள் ராசி உள்ளதா என்று பாருங்கள்.

Lord Shiva's Favourite : சிவனுக்கு பிடித்த மூன்று ராசிகள் என்ன தெரியுமா? இதனால் அவர்களுக்கு எத்தனை நன்மைகள் பாருங்க!
Lord Shiva's Favourite : சிவனுக்கு பிடித்த மூன்று ராசிகள் என்ன தெரியுமா? இதனால் அவர்களுக்கு எத்தனை நன்மைகள் பாருங்க!

இந்த மாதம் அம்மனுக்கும் உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் திருவிழாக்கள் நிறைய நடக்கிறது. இந்த ஆடி மாதத்தில், தேவர்களின் கடவுளான மகாதேவனை மகிழ்விப்பதன் மூலம், வாழ்க்கையின் துன்பங்களை அகற்ற முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

ஆடி மாதத்தில் இருந்து, படைப்பின் பொறுப்பு சிவனின் தோள்களில் விழுகிறது. இம்மாதத்தில் வரும் பூர்ண ஏகாதசியிலிருந்து 4 மாதங்களுக்கு விஷ்ணு பகவான் யோக நித்திரைக்கு செல்கிறார். அதே நேரத்தில், ஜோதிடத்தின்படி, சிவபெருமான் சில ராசிகளை மிகவும் விரும்புகிறார். 

இந்த ராசிகளில் இறைவனின் அருள் எப்போதும் இருக்கும். இந்த மாதத்தில் சிவனை பயபக்தியுடன் வழிபடுவது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும். எந்த ராசிகளில் வாசம் கொள்பவர் என்பதை தெரிந்துகொள்வோமா? இந்த ராசிக்காரர்களுக்கு சிவபெருமான் எத்தனை நன்மைகளை வழங்குகிறார்கள் என்று பாருங்கள். அவர்களுக்கு வாழ்வில் உறுதுணையாக இருந்து வழிகாட்டுகிறார். 

துலாம் ராசி 

துலாம் ராசிக்காரர்கள் சிவனின் ஆசீர்வாதம் பெற்றவர்கள். இந்த ராசி மகாதேவனுக்கு மிகவும் பிரியமானது. சிவனின் விருப்பமான ராசி துலாம் என்பதால், இவர்கள் அவரை மகிழ்விக்க சிரமப்படவேண்டிய அவசியமில்லை. 

துலாம் ராசிக்காரர்களின் அதிபதி சுக்கிரன். அதனால்தான் இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் சிவபுராணத்தை பாராயணம் செய்வது மகிழ்ச்சியையும்,  அமைதியையும் தரும்.

கும்பம் 

சிவபெருமானின் விருப்பமான ராசிகளில் கும்ப ராசியும் அடங்கும். கும்ப ராசியின் அதிபதி சனி. கும்ப ராசிக்காரர்கள் மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கூட எளிதில் சமாளிக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் சிவனால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். 

கும்ப ராசிக்காரர்கள் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் சிவ புராணத்தை பாராயணம் செய்ய வேண்டும். இது சிவபெருமானை மகிழ்விப்பதோடு, சனியின் மோசமான விளைவுகளையும் குறைக்கும்.

மகரம்

இந்த ராசியின் அதிபதி சனி கிரகம். மகர ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள். சிவபெருமானுக்கு பிடித்த ராசியில் சேர்க்கப்படுவதால், மகர ராசிக்காரர்களும் சிவனை மகிழ்விக்க மெனக்கெடவேண்டிய அவசியம் இல்லை. 

அதே நேரத்தில், சிவனை வழிபடுவதன் மூலமும், சிவலிங்கத்திற்கு ஜலபிஷேகம் செய்வதன் மூலமும், நீங்கள் உங்கள் தொழில் மற்றும் கல்வித் துறையில் உயரங்களை அடைய முடியும். சிவனை வழிபடுவதன் மூலம், இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் தீய விளைவும் குறைகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள், கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கங்கள், சொற்பொழிவுகள், நம்பிக்கைகள், வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner