Rahu Ketu: ராகு கேது தொடங்கிய அதிர்ஷ்ட மழை..யோகம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Ketu: ராகு கேது தொடங்கிய அதிர்ஷ்ட மழை..யோகம் யாருக்கு?

Rahu Ketu: ராகு கேது தொடங்கிய அதிர்ஷ்ட மழை..யோகம் யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 03, 2024 11:51 AM IST

ராகு மற்றும் கேது மாற்றத்தால் நல்ல நேரத்தை பெற்ற ராசிகளை காண்போம்.

ராகு மற்றும் கேது
ராகு மற்றும் கேது

கடந்த ஆண்டு தங்களது இடத்தை மாற்றினார்கள். ராக்கு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் தற்போது பயணம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் இவர்கள் பயணம் செய்ய உள்ளனர்.

ராகு கேது இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர்களின் இடமாற்றத்தால் விபரீத ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் பண யோகத்தில் குளிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

ராகு உங்கள் ராசியில் பன்னிரண்டாம் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். கேது உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். யோகத்திற்கு எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணவரவு எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். கடன் சிக்கல்கள் குறையும்.

ரிஷப ராசி

 

ராகு பகவான் உங்கள் ராசியில் லாப ஸ்தானத்தில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் பணவரவில் எந்த குறையும். இருக்காது புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. உச்சம் செல்லப் போகின்றீர்கள். இந்த புத்தாண்டு உங்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ராகு பகவான் எட்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். பூர்வீக சொத்துக்களில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. நோய் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். விபரீத ராஜயோகத்தால் உங்களுக்கு பணவரவில் இந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் ராகு பகவான் சஞ்சாரம் செய்து வருகின்றார். பணவரவில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். கடன் சிக்கல்கள் குறையும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் குறையும். திடீரென அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்து அதிக வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner