Aadi Pooram: உமாதேவி அவதரித்த நாள்.. பூரம் நட்சத்திரம் உச்சத்தில் எண்ணற்ற பலன்கள் கிட்டும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Aadi Pooram: உமாதேவி அவதரித்த நாள்.. பூரம் நட்சத்திரம் உச்சத்தில் எண்ணற்ற பலன்கள் கிட்டும்!

Aadi Pooram: உமாதேவி அவதரித்த நாள்.. பூரம் நட்சத்திரம் உச்சத்தில் எண்ணற்ற பலன்கள் கிட்டும்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 22, 2023 06:10 AM IST

ஆடிப்பூரத் திருநாளின் சிறப்புகள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

ஆடிப்பூரம்
ஆடிப்பூரம்

ஆடிப்பூரத் திருநாளன்று அம்மனை வழிபாடு செய்த குழந்தை பாக்கியம், தீர்க்க சுமங்கலி, திருமண பாக்கியம் என அனைத்து வரங்களையும் அம்பிகை கொடுப்பார் என்பது ஐதீகம் ஆகும். ஆடிப்பூரத் திருநாள் அம்மன் அவதரித்த நாளாகக் கூறப்படுகிறது.

ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் பூதேவியின் அம்சமான ஆண்டாள் அவதரித்தார் எனப் புராணங்கள் கூறுகின்றன. அதன் நினைவாகவே ஆடிப்பூர விழா ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

சைவ வைணவ வேறுபாடு இன்றி அனைத்து அம்மன் கோயில்களிலும் ஆடிப்பூரத் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஆடி மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தைப் போல் பூரம் நட்சத்திரமும் மிகவும் சிறப்பாகும்.

உலகத்தைக் காப்பாற்றுவதற்காக உமாதேவி இந்த நாளில் தான் அவதரித்தார் எனக் கூறப்படுகிறது. இந்த சிறப்பான நாளில் அம்மனுக்குச் சந்தனக் காப்பு, குங்குமம் காப்பு, வளைகாப்பு, மஞ்சள் காப்பு, வளையல் அலங்காரம் என அனைத்தையும் பக்தர்கள் செய்து வழிபாடு செய்வார்கள்.

இந்த ஆடிப்பூரம் ஜூலை 21 ஆம் தேதி பகல் 1.42 மணி முதல் ஜூலை 22 ஆம் தேதி மாலை 4.02 மணி வரை பூரம் நட்சத்திரம் உச்சத்தில் உள்ளது. ஜூலை 22 ஆம் தேதி காலை 11.34 மணிக்கு வழிபாட்டினை தொடங்கலாம்.

இந்த ஆடிப்பூரத் திருநாளன்று அம்மன் கோயில்களில் வளைகாப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அப்போது அம்மனுக்கு வலையில் வாங்கி கொடுத்து, அதிலிருந்து இரண்டு வளையல்களை வாங்கி அணிந்து கொண்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணமும், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆடிப்பூரத் திருநாளன்று பார்வதி தேவியையும், ஆண்டாளையும் வழிபாடு செய்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும், தீய சக்திகள் நம்மை விட்டு விலகும் எனக் கூறப்படுகிறது. பெரிய கோயிலாக இருந்தாலும் சரி, சிறிய கோயிலாக இருந்தாலும் சரி முடிந்தவர்கள் அம்மன் இருக்கும் இடத்திற்குச் சென்று வழிபாடு செய்தால் போதும் நாம் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாக்கும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்