Aadi Pradosham: ஆடி பிரதோஷம்.. ஞாயிற்றுக்கிழமை.. ராகு காலம் - சிவனின் பரிபூரண அருளை பெறும் நாள்!
ஆடி மாத பிரதோஷத்தின் சிறப்புகள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
சிவபெருமானுக்கு உரிய நாளாகப் பிரதோஷம் கூறப்படுகிறது. மாதந்தோறும் பிரதோஷ நாள் வரும். பௌர்ணமிக்கு மூன்று நாள் முன்னதாகவும், அமாவாசைக்கு மூன்று நாள் முன்னதாகவும் வருவதே திரயோதசி. இதுவே பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் வழிபாட்டிற்குச் சிறப்பு கூறிய மாதமாக விளங்கக் கூடிய ஆடி மாதத்தில் வரும் பிரதோஷம் மேலும் சிறப்பாகும். ஒவ்வொரு பிரதோஷமும் ஒவ்வொரு சிறப்பை கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அப்படி ஆடி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷம் மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இந்த சுபநாளோடு சேர்ந்து பிரதோஷமும் வருகின்ற காரணத்தினால் இது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதோஷம் ராகு கால நேரத்தில் வருவதால் அது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு வழிபாடு மிகவும் சிறப்பாக இருக்கும். அப்படி இருக்க இந்த பிரதோஷத்திருநாளில் அம்மனே சிவபெருமானை வழிபாடு செய்து வரங்களைப் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.
இந்த சிறப்பு மிகுந்த நாளில் சிவபெருமானின் வழிபட்டால் வாழ்க்கையில் அனைத்து துன்பங்களும் விலகும் எனக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் வீட்டிற்குக் கூடிய சிவபெருமானின் திருக்கோயில்களில் இந்த சிறப்பு மிகுந்த நாளில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
இந்தப் பிரதோஷ பூஜைகளில் கலந்து கொண்டால் ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த திருநாளில் நந்தி தேவனை வணங்கி விட்டு அதன் பின்னர் சிவபெருமானின் வழிபாடு செய்வது பலன்களை இரட்டிப்பாக்கும்.
குறிப்பாக இந்த திருநாளில் பசு மாடுகளுக்கு உணவளித்தால் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அதிகமாகும். இன்று மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான ராகு காலம் நேரத்தில் பிரதோஷம் நடைபெறுகிறது.
இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்து விட்டு அதன் பின்னர் சிவன் கோயில்களுக்குச் சென்று பிரதோஷ அபிஷேகத்திற்குப் பொருட்களை வாங்கி கொடுத்தால் தலைமுறை துன்பங்களும் விட்டு விலகும் என்பது ஐதீகமாகும்.
நந்தி தேவருக்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகப்படுத்தி சுபிட்சத்தைச் சிவபெருமான் அள்ளிக் கொடுப்பார் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்