Aadi Velli: வேண்டுதல்கள் நிறைவேற்றும் ஆடி வெள்ளி.. உக்கிர குழந்தையாய் அம்மன்!
ஆடி வெள்ளிக்கிழமையின் சிறப்புகள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
அம்மனுக்கு உரிய மாதமாக விளங்கக்கூடிய இந்த ஆடி மாதத்தில் நமது அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது ஐதீகமாகும். உலக உயிர்களைக் காப்பாற்றுவதற்காக அன்னை பராசக்தி பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளார்.
பெண்களின் குறைகளைத் தீர்ப்பதற்காகவே வரம் பெற்ற காலம் தான் இந்த ஆடி மாதம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு எனக் கூறப்படுகிறது.
ஆடி வெள்ளிக்கிழமை அம்மனை வழிபட்டுப் பூஜித்தால் நம்மைச் சுற்றியுள்ள தீமைகள் அனைத்தும் விலகும் எனக் கூறப்படுகிறது. திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், வேலை தடைகள் உள்ளிட்டவை அனைத்தும் நீங்கும் என நம்பப்படுகிறது.
ஆடி மாதத்தில் வரக்கூடிய அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனை வழிபட்டு பூஜை செய்ய வேண்டும். அப்படிச் செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் ஒரு வெள்ளிக்கிழமையாவது வழிபாடு செய்ய வேண்டும். அம்மனை வழிபட்டு வேண்டிய வரங்களை பெறுவதற்கு ஏற்ற காலம் இந்த ஆடி மாதம் தான்.
இந்த ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் சப்த கன்னிகள், குலதெய்வம், முப்பெரும் தேவியர் என அனைத்து பெண் தெய்வங்களையும் வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
பக்தர்களைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத்த துர்கா தேவியை வழிபடுவதற்கு இதுவே சிறந்த காலமாகும். உக்கிர வடிவம் கொண்ட காளிதேவியை இந்த நாளில் வழிபட்டால் நமது வாழ்வில் இருக்கக்கூடிய துக்கங்கள், துயரங்கள், சிக்கல்கள் அனைத்தையும் காளிதேவி அழிப்பாள் என நம்பப்படுகிறது.
ஆடி வெள்ளி வழிபாடு சிறப்புகள்
ஆடி வெள்ளிக்கிழமை வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உடலில் என்ன நோய் இருந்தாலும் அந்த நோய் நீங்கும் என நம்பப்படுகிறது. எந்த வேண்டுதல்களாக இருந்தாலும் ஆடி வெள்ளி மூலம் அதனை நிறைவேற்றிக் கொள்ளலாம் என ஆன்மீகம் கூறுகிறது.
ஆடி வெள்ளிக்கிழமை அன்று வேப்பிலை அல்லது விரலி மஞ்சள் கிழங்கு உள்ளிட்டவற்றை மாலையாகக் கோர்த்து அம்மனுக்கு அணிவிக்கலாம். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய அம்மன் படத்திற்கு மாலை அணிவித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றலாம்.
இது போன்ற வழிபாடு முறைகளின் மூலம் அம்மன் மனம் குளிர்ந்து நினைத்த காரியங்களை நிறைவேற்றி, வேண்டுதல்களை நடத்தி வைப்பார் என நம்பப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்