தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: புதன் புரட்டி எடுக்கிறார்.. பணத்தில் விளையாடுவது யார்.. இந்த ராசிகள் யோகம் பெறுகிறார்கள்!

Lord Mercury: புதன் புரட்டி எடுக்கிறார்.. பணத்தில் விளையாடுவது யார்.. இந்த ராசிகள் யோகம் பெறுகிறார்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 28, 2024 12:48 PM IST

Lord Mercury: புதன் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். இந்நிலையில் புதன் பகவானின் இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

புதன் புரட்டி எடுக்கிறார்.. பணத்தில் விளையாடுவது யார்.. இந்த ராசிகள் யோகம் பெறுகிறார்கள்!
புதன் புரட்டி எடுக்கிறார்.. பணத்தில் விளையாடுவது யார்.. இந்த ராசிகள் யோகம் பெறுகிறார்கள்!

Lord Mercury: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான், பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, கல்வி, வியாபாரம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.

புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்நிலையில் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று அதாவது நாளை சந்திர பகவானின் கடக ராசிக்குள் நுழைகிறார்.