Tamil News  /  Astrology  /  Let Us See The Zodiac Signs In Which We Will See Progress In Life By Lord Mars

Money Luck: கட்டு கட்டாக பணத்தோடு வரும் செவ்வாய்.. யோகராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 26, 2024 12:32 PM IST

Transit of Mars: செவ்வாய் பகவானால் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காணப்போகும் ராசிகளை காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாது செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 17ஆம் தேதி அன்று தனுசு ராசியில் உதயமானார். வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே ராசியில் இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார்.

செவ்வாய் பகவான் தனுசு ராசியில் உதயமாகின்ற காரணத்தினால் அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் பலன்களைப் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் உதயமாகியுள்ளார். உங்களுக்கு பல்வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வெளிநாட்டிற்கு வேலை செய்ய செல்ல விரும்பும் நபர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேளையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமையாக இருந்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுன ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் உதயமாகியுள்ளார். உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை செவ்வாய் பகவான் உருவாக்கி கொடுப்பார். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல்கள் ஏற்படும்.

கடக ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் உதயமாகி உள்ளார். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நீங்கள் நினைத்த காரியம் வெற்றி அடையும். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். செலவை கட்டுப்படுத்தினால் நன்மைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் எந்த குறையும் இருக்காது.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் உதித்துள்ளார். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வாழ்க்கையில் ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தின் தேவைகள் சிறப்பாக நிறைவடையும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சுமூகமான சூழ்நிலை உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.