Leo Daily Horoscope: ’நெட் ஒர்க்கிங் மூலம் நேசிப்பவரை சந்திக்கும் நாள் இது!’ சிம்ம ராசியினருக்கான இன்றைய ராசிபலன்!-leo daily horoscope today august 5 2024 predicts love affection career money health - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Leo Daily Horoscope: ’நெட் ஒர்க்கிங் மூலம் நேசிப்பவரை சந்திக்கும் நாள் இது!’ சிம்ம ராசியினருக்கான இன்றைய ராசிபலன்!

Leo Daily Horoscope: ’நெட் ஒர்க்கிங் மூலம் நேசிப்பவரை சந்திக்கும் நாள் இது!’ சிம்ம ராசியினருக்கான இன்றைய ராசிபலன்!

Kathiravan V HT Tamil
Aug 05, 2024 07:31 AM IST

Leo Daily Horoscope: சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக, இன்று வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். தொழில் சார்ந்த நெட்வொர்க்கிங்கில் ஈடுபடுவது நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். எனவே தொழில் மற்றும் அலுவல் சார்ந்த நிகழ்வுகளை புறக்கணிக்காமல் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

Leo Daily Horoscope Today, August 5, 2024. Today is perfect for forging new connections and embracing unexpected opportunities.
Leo Daily Horoscope Today, August 5, 2024. Today is perfect for forging new connections and embracing unexpected opportunities.

சிம்ம ராசிக்காரர்களே, இன்று வாய்ப்புகள் உங்களின் வாயிற் கதவை தேடி வரும். காதல், தொழில் அல்லது தனிப்பட்ட வளர்ச்சி எதுவாக இருந்தாலும் உங்களுக்கு சாதகமான நன்மைகளை இன்றைய தினத்தில் பெறலாம். அர்த்தமுள்ள இணைப்புகளை உருவாக்க உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். மாற்றங்களை எதிர்கொள்ள மனதை தயார் செய்யுங்கள்.

காதல் எப்படி?

நீங்கள் காதல் உறவில் ஈடுபடாமல் சிங்கிள் ஆக இருந்தால், எதிர்பாராத இடத்தில் சிறப்பு வாய்ந்த ஒருவரைச் சந்திக்கலாம். ஏற்கெனவே காதல் உறவுகளில் உள்ளவர்களுக்கு, இதயப்பூர்வமான உரையாடல்கள் மற்றும் பகிரப்பட்ட செயல்பாடுகள் உங்களின் உறவு பலப்படும். காதலர்கள் திறந்த மனதுடன் செயல்படுவது இருவருக்கும் இடையே உள்ள பரஸ்பர புரிதலை மேம்படுத்தும். உங்கள் காதல் துணைக்கு உங்கள் அன்பையும் பாசத்தையும் காட்ட தயங்க வேண்டாம். உங்களின் அன்புக்காக ஏங்கி காத்திருக்கும் அவர்கள் உங்களின் செயல்பாடுகளை பாராட்டுவார்கள். 

தொழில் எப்படி?

சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக, இன்று வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். தொழில் சார்ந்த நெட்வொர்க்கிங்கில் ஈடுபடுவது நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். எனவே தொழில் மற்றும் அலுவல் சார்ந்த நிகழ்வுகளை புறக்கணிக்காமல் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் தலைமைத்துவ குணங்கள் பிரகாசிக்க வாய்ப்பு உள்ளது, இது புதிய யோசனைகளை உருவாக்க அல்லது புதிய திட்டத்தை எடுக்க சிறந்த நாளாக அமைகிறது. நம்பிக்கையுடனும் சுறுசுறுப்புடனும் இருங்கள், உங்கள் மேலதிகாரிகளையும் சக ஊழியர்களையும் நீங்கள் கவர்வீர்கள்.

செல்வம் எப்படி?

நிதி ரீதியாக, புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதற்கு இது ஒரு நல்ல நாள். புதிய முயற்சியில் முதலீடு செய்தாலும் அல்லது எதிர்காலத் திட்டங்களுக்குச் சேமிப்பாக இருந்தாலும், உங்கள் உள்ளுணர்வை நம்பி யோசித்து செயலாற்றுங்கள். நீண்ட கால நிதி நிலைத்தன்மையில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் எதிர்பாராத வருமான ஆதாரத்தைக் காணலாம் அல்லது நிதி விஷயத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பெறலாம். கவனமாக இருங்கள் மற்றும் கவனமாக திட்டமிடுங்கள்.

ஆரோக்கியம் எப்படி?

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று ஒரு சமநிலையான அணுகுமுறைக்கு அழைப்பு விடுக்கிறது. நீங்கள் சுறுசுறுப்பாக உணரலாம், எனவே உடற்பயிற்சி அல்லது நீண்ட நடைப்பயிற்சி போன்ற செயல்பாடுகள் உடலுக்கும் மனதிற்கும் நன்மைகளை பெற்றுத் தரும். நாள் முழுவதும் உங்கள் ஆற்றலைத் தக்கவைக்க முறையான உணவு முறையை பின்பற்றவும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது முக்கியம். தியானம் அல்லது நீங்கள் விரும்பும் பொழுதுபோக்கில் மனதை செலுத்துவதன் மூலம்  மன அழுத்தம் குறையும். 

சிம்ம ராசியின் பண்புகள்

  • வலிமை: தாராளம், விசுவாசம், ஆற்றல், உற்சாகம்
  • பலவீனம்: ஆணவம், ஆடம்பரம், கவனக்குறைவு
  • சின்னம்: சிங்கம்
  • உறுப்பு: நெருப்பு
  • உடல் பகுதி : இதயம் மற்றும் முதுகெலும்பு
  • அதிபதி: சூரியன்
  • அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு
  • அதிர்ஷ்ட நிறம்: தங்கம்
  • அதிர்ஷ்ட எண் : 19
  • அதிர்ஷ்டக் கல் : ரூபி
  • இயற்கையான தொடர்பு: மேஷம், மிதுனம், துலாம், தனுசு
  • நல்ல இணக்கம்: கும்பம்
  • நியாயமான பொருந்தக்கூடிய தன்மை: கடகம், கன்னி, மகரம், மீனம்
  • குறைவான பொருந்தக்கூடிய தன்மை: விருச்சிகம், ரிஷபம்

 

மூலம்: டாக்டர் ஜே.என்.பாண்டே

வேத ஜோதிடம் & வாஸ்து நிபுணர்

மின்னஞ்சல்: djnpandey@gmail.com

தொலைபேசி: 9811107060 (WhatsApp மட்டும்)