தங்க நகைகளை அணிவது எப்படி?
நமது உடலில் தங்கத்தை எப்படி அணியவேண்டும் என்பது குறித்து இங்கே காணலாம்.
தங்கம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி விருப்பத்தோடு தங்குவார். இதனால்தான் பெண்கள் தங்கம் அணிய வேண்டும் எனப் பெரியவர்கள் கூறுகின்றனர். தங்க நகைகள் அணிவதால் உடலுக்கு ஒரு புனிதத் தன்மை கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
மகாலட்சுமியின் வசிப்பிடம் என்பதால் தங்க நகைகளைக் கால்களில் அணிவதைத் தவிர்க்க வேண்டும், அதன் காரணமாகவே பலரும் தங்கத்தைக் காலில் அணிய மாட்டார்கள்.
தங்கத்தை எந்த அளவு, எவ்வாறு, எப்படி அணியவேண்டும் என ஒரு வரைமுறை உள்ளது. தங்க நகைகளால் நமக்குப் பல பலன்கள் கிடைக்கும் சங்ககால நூல்கள் தெளிவாகக் கூறியுள்ளன. பொதுவாகத் தங்க நகைகள் உறுதியான தன்மை கொண்டவை, அதனை அணியும்போது நமது மனதிலும் உறுதி உண்டாகும். இதன் காரணமாக நமது சிந்தனை உறுதியாக இருக்கும்.
இயல்பாகவே தன்னம்பிக்கை உணர்வை அதிகப்படுத்தும் தன்மை கொண்ட தங்கத்தை அணிகலன்களாக அணியும்போது, நமது மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இதன் காரணமாகவே, தாலியை தங்கத்தில் செய்யும் மரபை முன்னோர்கள் உண்டாக்கி உள்ளனர்.
முக்கியமாகச் சரியான நேரத்தில், சரியான அளவில் தங்கம் வாங்கினால் அதனால் பல நன்மைகள் ஏற்படும். அதுபோன்ற நாட்களில் அட்சயதிருதியை சுப நாளும் ஒன்று. எனவே தங்கத்தை முறையாகப் பயன்படுத்துங்கள்.