தமிழ் செய்திகள்  /  Astrology  /  Know About The Spritual Effects Of Attar

Attar Effects: வசிய சக்தியை கொண்ட அத்தர்..! காரியங்களில் வெற்றியை தரும் வாசனை திறவியங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 20, 2024 11:40 AM IST

நாம் செய்யும் காரியங்களை வெற்றியை கொடுக்கும் ஆற்றல் அர்த்தர், ஜவ்வாது போன்ற வாசனை திறவியங்களுக்கு இருக்கிறது. இதில் வசியம் செய்யும் ஈரப்பு சக்தி உள்ளதாக ஆன்மிக சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

அத்தர் தரும் ஆன்மிக பலன்கள்
அத்தர் தரும் ஆன்மிக பலன்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

பிறரை பார்க்கும்போது, பேசும்போதும், பழகும்போதும் நம்மிடம் இருக்கும் ஈர்ப்புசக்திதான் நன்கு பிரபலப்படுத்தும். குறிப்பாக மார்கெட்டிங், சேல்ஸ் வேலையில் இருப்பவர்களுக்கும், தலைமை பணியில் இருப்பவர்களும் ஈரப்பு என்பது மிகவும் முக்கியம்.

அந்த வகையில் ஈர்ப்பையும், வசியத்தையும் தரக்கூடிய அற்புதமான சக்தி அத்தருக்கு உள்ளது. பூஜை பொருள்களில் ஒன்றாக இருக்கும் அத்தர் வாசனை திறவியமாகவே பலரால் பார்க்கப்படுகிறது. சாமி சிலைகளுக்கு அத்தார், ஜவ்வாதை வைத்து பூஜிப்பதும் உண்டு.

அத்தரில் ஏராளமான ஆன்மிக பலன்கள் நிறைந்திருப்பதாக ஆன்மிக சாஸ்திர நிபுணர்கள் கூறுகிறார்கள். வாசனை திறவியமாக இருந்தாலும் அத்தருக்கு ஈர்ப்பு சக்தி மிக மிக அதிகம். நன்மை தரும் விஷயங்களை செய்யும் முன் அத்தரை பூசி கொள்வதால் பலனை பெறலாம்.

நேர்மறை ஆற்றலை அதிகரித்து பேச்சில் தெளிவையும், காரியத்தில் வெற்றியையும் தரும் வல்லமையை கொண்டுள்ளது. அத்தர், ஜவ்வாதை பயன்படுத்தும்போது "ஓம் ஐக்கிய தேவாய நமஹ" என்ற மந்திரத்தை உச்சரிக்கும் போது விஷேசமான பலன்களை கிடைக்கும்.

காரியத்தில் வெற்றி பெறுவதற்கு இந்த வாசனை திறவியத்துக்கும் மகத்துவம் உண்டு. மந்திர சக்தி காற்றின் மூலமாக வருவதாக கூறப்படுகிறது. மந்திர ஜெபத்துடன் அத்தரை பயன்படுத்தினால் ஈரப்பு சக்தியானது கிடைக்கும்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்