Guru Vagra Peyarchi 2024: ’காதல் கைகூடும்! விரைவில் டும் டும் டும்!’ கன்னி ராசிக்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்!
Guru Vagra Peyarchi 2024: புத்திர பாக்கியம் உண்டாகும். காதல் கைக்கூடும். காதலில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து திருமணம் முடிவாகும். தந்தைக்கு இருந்த உடல்நல குறைப்பாடுகள் தீரும். உடலில் இருந்த நோய்கள் தீரும். புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் ஆனவர் வரும் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரை 119 நாட்கள் வக்ரம் பெற உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் வலுவாக இருக்கும்போது, ஜாதகர் சத்தியத்தின் பாதையில் செல்வார். கண்கள் மற்றும் முகத்தில் ஒரு பிரகாசமான தோற்றம் இருக்கும். ஒரு மனிதனின் ஒழுக்கத்தை சிறப்பாக தரக்கூடிய கிரகம் குரு ஆகும். பெருமை, மேன்மை, தனம், செல்வாக்கு, கல்வி, குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தரும் கிரமாக குரு உள்ளார். இயற்கை சுபர் ஆக உள்ள குரு பகவான் பெருந்தன்மை குணத்திற்கு சொந்தக்காரர்.
இது போன்ற போட்டோக்கள்
May 21, 2025 09:06 PMராகு-கேது பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையை ஒரே இரவில் தலைகீழாக மாற போகுது!
May 21, 2025 06:33 PMகொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பணக்கஷ்டம் தீர போகும் ராசிகள்.. பணமழை யாருக்கு?
May 21, 2025 06:26 PMசனி கொடுப்பதை யாரு தடுப்பா.. சொகுசு பணமழை கொட்டும் ராசிகள்.. இது உங்க ராசியா பாருங்க?
May 21, 2025 10:05 AMசிம்ம ராசி: பண மழை கொட்டும் செவ்வாய்.. 18 மாதங்களுக்கு பிறகு.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!
May 21, 2025 05:00 AM‘மகிழ்ச்சி நிறையும்.. கவனம் முக்கியம்’ மே.21 புதன்கிழமை.. இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 20, 2025 11:48 PMதிடீர் பணவரவு, தேடி வரும் அதிர்ஷ்டம்.. விரைவில் நீங்கள் பணக்காரர் ஆவதை குறிக்கு கனவுகள் இதோ
குரு பகவான் ராசியை பார்ப்பதால் சுபகாரியங்கள் வேகமாக நடக்கும். மாற்றங்கள், முன்னேற்றங்கள் உண்டாகும். பூமி சார்ந்த சிக்கல்கள் தீரும். தைரிய, வீரிய, விஜய ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பது மிகுந்த நன்மைகளை தரும். விற்க முடியாத நிலங்களை விற்பீர்கள்.
குரு வக்கிர காலத்தில் பிறந்தவர்களுக்கு குரு வக்கிர பயிற்சி பன்மடங்கு நன்மையை தரும். குரு வக்கிரம் இல்லாத காலத்தில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும்.